பிளஸ் 2 தேர்வு முடிவில் 15,977 பேர் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர் சாதனை| Dinamalar

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவில் 15,977 பேர் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர் சாதனை

Added : ஜூலை 20, 2021
Share
சிவகங்கை : பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானதில் சிவகங்கையில் 162 பள்ளிகளை சேர்ந்த 15,977 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத விழுக்காடு பெற்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக 2020ல் இருந்து பள்ளிகள் இயங்கவில்லை.முற்றிலும் ஆன்லைன் மூலமே வகுப்பு நடந்தது. கொரோனா ஊரடங்கு அச்சத்தால் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல், ஒன்று முதல் 10 ம் வகுப்பு வரை ஆல்பாஸ்' வழங்கினர்.பிளஸ் 2 விற்கு

சிவகங்கை : பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானதில் சிவகங்கையில் 162 பள்ளிகளை சேர்ந்த 15,977 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத விழுக்காடு பெற்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 2020ல் இருந்து பள்ளிகள் இயங்கவில்லை.முற்றிலும் ஆன்லைன் மூலமே வகுப்பு நடந்தது. கொரோனா ஊரடங்கு அச்சத்தால் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல், ஒன்று முதல் 10 ம் வகுப்பு வரை ஆல்பாஸ்' வழங்கினர்.

பிளஸ் 2 விற்கு தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா 2 ம் அலையின் வேகம் அதிகரித்ததால், இக்கல்வி ஆண்டிற்கான அரசு பொது தேர்வை நடத்தாமல், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ்2 அகமதிப்பீடுகளை கணக்கிட்டு மதிப்பெண் வழங்க அரசு உத்தர விட்டது.

நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டனர்.சிவகங்கை வருவாய் மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துார் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் உள்ள 162 பள்ளிகளில் 7098 மாணவர்கள், 8879 மாணவிகள் என 15 ஆயிரத்து 977 மாணவர்கள் படித்தனர்.இவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியானதில் அனைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி விழுக்காட்டை பெற்றிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X