மின் துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
கும்மிடிப்பூண்டி--ஆரம்பாக்கம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து, கீழே சென்ற வீட்டு இணைப்பு மின் பாதையில் விழுந்தது.அப்போது வீட்டு இணைப்பு மின் பாதையில் பலத்த சத்தத்துடன் தீப்பொறி ஏற்பட்டு, தண்டலம் கிராமத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில், மின் மீட்டர் எரிந்ததுடன், மின்சாதன பொருட்களும் நாசமாகின.இதனால்,

கும்மிடிப்பூண்டி--ஆரம்பாக்கம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து, கீழே சென்ற வீட்டு இணைப்பு மின் பாதையில் விழுந்தது.அப்போது வீட்டு இணைப்பு மின் பாதையில் பலத்த சத்தத்துடன் தீப்பொறி ஏற்பட்டு, தண்டலம் கிராமத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில், மின் மீட்டர் எரிந்ததுடன், மின்சாதன பொருட்களும் நாசமாகின.இதனால், தண்டலம், ஏடூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இரவு முழுதும் கண்டுக்கொள்ளாத மின் துறையை கண்டித்து, நேற்று காலை, தண்டலம் கிராமத்தில், அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சென்ற மின் துறை அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இதுபோன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தனர்.சமாதானம் அடைந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதன் பின், நேற்று பகலில் மின் பிரச்னை சரி செய்யப்பட்டு, மின் வினியோகிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X