சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழாய் பதிக்க எதிர்ப்பு இரு தரப்பினர் மோதல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் அருகே பிரமனுாரில் குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது குறித்து பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.பிரமனுார் கிராமத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி 31 லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி தலைவர் பழனிசெல்வம் தலைமையில் நடந்து வருகிறது. பணி நடைபெறும் இடத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் முருகன்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே பிரமனுாரில் குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது குறித்து பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பிரமனுார் கிராமத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி 31 லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி தலைவர் பழனிசெல்வம் தலைமையில் நடந்து வருகிறது. பணி நடைபெறும் இடத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் முருகன் இருந்துள்ளனர்.

அங்கு வந்த அழகுராமச்சந்திரன், பெரியசாமி, சந்திரகுமார், மணி சந்திரன், அழகுராஜா, ராயல்சுல்தான் ரோட்டை சேதப்படுத்தி குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஊராட்சி தலைவரையும் அவரது கணவரையும் திட்டியுள்ளனர். இதனால் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. மானாமதுரை டி.எஸ்.பி., சுந்தரமாணிக்கம் தலைமையில் பிரமனுாரில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X