சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் விசேஷ அறை அமைத்து கஞ்சா கடத்திய முக்கிய புள்ளி கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை-ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு, லாரியில் விசேஷ அறை அமைத்து, பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள கஞ்சா கடத்திய நபர்களை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சென்ற லாரியை, நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே போலீசார் மடக்கி சோதனை செய்தனர். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சங்கர்

சென்னை-ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு, லாரியில் விசேஷ அறை அமைத்து, பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள கஞ்சா கடத்திய நபர்களை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சென்ற லாரியை, நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே போலீசார் மடக்கி சோதனை செய்தனர். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சங்கர் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். இவரிடம் விசாரித்த போது, ஆந்திராவுக்கு காய்கறி ஏற்றிச் சென்று, திரும்பி வருவதாக கூறினார். லாரியும் காலியாக இருந்தது. எனினும், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், லாரி முழுதையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, லாரியில் சரக்கு ஏற்றிச் செல்லும் பகுதியில், விசேஷ அறை அமைத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 327 கிலோ கஞ்சா மூட்டைகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளியான, கேரள மாநிலம், விழிஞ்சியத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரை, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில், அங்குள்ள போலீசார் உதவியுடன் பிடித்தனர்.இருவரையும் கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X