பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கல்லுாரிக்கு 10 ஏக்கர் ஒதுக்கீடு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி விரிவாக்கத்திற்காக அரசு ஒதுக்கிய 10 ஏக்கர் நிலத்தை பாதுகாப்பதில் கல்லுாரி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். இங்கு 2012 - 2013ம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டது.ஆண்டுதோறும் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.,- சேர்கின்றனர். தற்போது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும்

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி விரிவாக்கத்திற்காக அரசு ஒதுக்கிய 10 ஏக்கர் நிலத்தை பாதுகாப்பதில் கல்லுாரி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். இங்கு 2012 - 2013ம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டது.

ஆண்டுதோறும் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.,- சேர்கின்றனர். தற்போது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பி.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங் கல்லுாரிகள் துவக்கவும் முயற்சி மேற்கொள்கின்றனர்.மாணவர் விடுதி, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட மருத்துவமனை அருகே 10 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என முன்னாள் டீன் ரத்தினவேல், கலெக்டர் மூலம் தொடர்ந்து முயற்சித்தார்.

அதன் பயனாக சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன், தாசில்தார் தர்மலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்து, மருத்துவ கல்லுாரிக்கு அருகிலேயே கூடுதலாக 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளனர். மாணவர் விடுதி, கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட உள்ள நிலையில், இந்நிலத்தை பாதுகாப்பதில், கல்லுாரி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

மருத்துவ கல்லுாரி இடங்களை ஆக்கிரமித்து பெட்டிக்கடைகள் பெருகி வருவதோடு, அனுமதியின்றி மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனர். அரசு மருத்துவ கல்லுாரிக்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும் முன், அதை பாதுகாக்க கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X