மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மின் திருத்த மசோதாவை கண்டித்து 52 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மின் ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் உமாநாத் தொ.மு.ச.,மாவட்ட செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் கருணாநிதி, எம்பிளாயிஸ் பெடரேஷன்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மின் திருத்த மசோதாவை கண்டித்து 52 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மின் ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் உமாநாத் தொ.மு.ச.,மாவட்ட செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் கருணாநிதி, எம்பிளாயிஸ் பெடரேஷன் சாத்தையா, இன்ஜினியர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார், பொறியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் அப்துல்ரகுமான், ஐக்கிய சங்க கோட்ட செயலாளர் செல்வக்குமார், ஐ.என்.டி.யு.சி மாவட்டத்தலைவர் சண்முகபாண்டி, தொ.மு.ச., ராமமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மின் திருத்த சட்ட மசோதாவை கண்டித்துகோஷங்கள் எழுப்பினர்.காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை, இளையான்குடி, தேவகோட்டை, திருப்புவனம் உட்பட 52 மின் வாரிய அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X