மீன்வளம் பாதிப்பால் மீனவர்கள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன்வளம் பாதிப்பால் மீனவர்கள் போராட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
மீஞ்சூர்-ஆற்றின் பாதையை மறித்து, நிலக்கரி கொண்டு செல்வதற்கான கன்வேயர் பெல்ட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மீஞ்சூர் அடுத்த, ஊரணம்பேடு கிராமத்தில் புதியதாக அமைந்து வரும் அனல் நிலையத்திற்கு, நிலக்கரி கொண்டு செல்வதற்காக எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளுக்காக,

மீஞ்சூர்-ஆற்றின் பாதையை மறித்து, நிலக்கரி கொண்டு செல்வதற்கான கன்வேயர் பெல்ட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மீஞ்சூர் அடுத்த, ஊரணம்பேடு கிராமத்தில் புதியதாக அமைந்து வரும் அனல் நிலையத்திற்கு, நிலக்கரி கொண்டு செல்வதற்காக எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளுக்காக, கொசஸ்தலை ஆற்றை மண் கொட்டி மூடப்படுவதாகவும், அங்குள்ள அலையாத்தி காடுகள் அழிக்கப்படுவதாகவும் கூறி, நேற்று, எண்ணுார் காட்டுகுப்பம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எண்ணுார் துறைமுகம் அருகே நடந்த போராட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போராட்டத்தின்போது, மீன்வளம் அதிகம் உள்ள ஆற்றுப் பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்,கொசஸ்தலை ஆற்றின் ஆக்கிரமிப்புகளால் மீன்வளம் அழிந்து வருவதால், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் மீனவர்களிடம் பேச்சில் ஈடுபட்டார். மீனவர்கள், மின்வாரிய அதிகாரிகள், வருவாய் துறை, பொதுப்பணித் துறை என, அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து பேச்சு நடத்தி மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X