மயான புகையால் திணறும் மஞ்சள்பட்டினம் மக்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டினம் மயானத்தில் இருந்து வெளியாகும்புகையால் அப்பகுதிமக்கள் திணறிவருகின்றனர்.பரமக்குடி முதல் வார்டான மஞ்சள்பட்டினம் பகுதியிலுள்ள மயானத்தில்2014ல் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.இங்கு குடியிருக்கும் மக்கள் மயானப் புகையிலிருந்து நிம்மதி அடைந்தனர். சில வருடங்கள் மட்டும் நிம்மதி நீடித்தது. தொடர்ந்து தகனமேடை

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டினம் மயானத்தில் இருந்து வெளியாகும்புகையால் அப்பகுதிமக்கள் திணறிவருகின்றனர்.

பரமக்குடி முதல் வார்டான மஞ்சள்பட்டினம் பகுதியிலுள்ள மயானத்தில்2014ல் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.இங்கு குடியிருக்கும் மக்கள் மயானப் புகையிலிருந்து நிம்மதி அடைந்தனர். சில வருடங்கள் மட்டும் நிம்மதி நீடித்தது. தொடர்ந்து தகனமேடை பராமரிக்கப்படாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலை உள்ளது.

தற்போது கொரோனாவால் ஒரு சில நாட்களில் ஐந்திற்கும் மேற்பட்ட இறப்பு சம்பவங்களும் நிகழ்ந்து இங்கு இறந்தவர்கள் உடல் எரிக்கப்பட்டுள்ளது. எரிவாயு தகனமேடை செயல்படாமல் இருப்பதால் ஒட்டுமொத்த புகையும் அப்பகுதி குடியிருப்புவாசிகளை நிம்மதி இழக்க செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X