பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் கலையரங்கத்துடன் அருங்காட்சியக கட்டடப்பணி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்புவனம் : கீழடியில் 11.03 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் திறந்த வெளி கலையரங்கத்துடன் கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கீழடியில் 11கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியக பணிகள் நடந்து வருகின்றன. சுடுமண் பொருட்கள், விலங்குகள் பொருட்கள், உலோக பொருட்கள், எலும்பு பொருட்கள், பானை ஒடுகள், நிர்வாக கட்டடம், கழிப்பறை, திறந்த வெளி

திருப்புவனம் : கீழடியில் 11.03 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் திறந்த வெளி கலையரங்கத்துடன் கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழடியில் 11கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியக பணிகள் நடந்து வருகின்றன. சுடுமண் பொருட்கள், விலங்குகள் பொருட்கள், உலோக பொருட்கள், எலும்பு பொருட்கள், பானை ஒடுகள், நிர்வாக கட்டடம், கழிப்பறை, திறந்த வெளி கலையரங்கம் உள்ளிட்ட எட்டு பிரிவுகளாக கட்டடப்பணிகள் நடந்து வருகின்றன.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் முன்புறம் வாகன பார்க்கிங், அதன்பின் அலுவலக கட்டடம், அதன்பின் ஒவ்வொரு வகை பொருட்களுக்கும் தனித்தனி பிரிவாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு சில பிரிவுகளுக்கு இரண்டு முதல் மூன்று தளங்கள் உள்ளதாக கட்டப்படுகிறது.

தொல்லியல் துறை மாணவர்கள், அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பள்ளி மாணவர்களுக்கு என திறந்த வெளி கலையரங்கமும் கட்டப்படுகிறது.எதிர்காலத்தில் தொல்லியல் அகழாய்வு சம்பந்தமான ஒலி,ஒளி காட்சிகளை ஒளிபரப்பவும் திட்டமிட்டு கட்டுமான பணிகள் நடக்கின்றன, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X