சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ணை வீட்டில் மது விருந்து பெண்கள் உட்பட 15 பேர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கானத்துார்,--கானத்துாரில் உள்ள பண்ணை வீட்டில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய பெண்கள் உட்பட 15 பேரை, போலீசார் கைது செய்தனர். வீட்டுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரில் உள்ள, 'சுகுணா கார்டன்' என்ற பண்ணை வீட்டில், நேற்று முன்தினம் இரவு மது விருந்து நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர், போதையில் இளம் பெண்களுடன் நடனமாடினர்.கொரோனா ஊரடங்கு தடையை

கானத்துார்,--கானத்துாரில் உள்ள பண்ணை வீட்டில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய பெண்கள் உட்பட 15 பேரை, போலீசார் கைது செய்தனர். வீட்டுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரில் உள்ள, 'சுகுணா கார்டன்' என்ற பண்ணை வீட்டில், நேற்று முன்தினம் இரவு மது விருந்து நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர், போதையில் இளம் பெண்களுடன் நடனமாடினர்.கொரோனா ஊரடங்கு தடையை மீறி, மது விருந்து நடத்திய பண்ணை வீட்டை, கானத்துார் போலீசார் சோதனை செய்தனர். இதில், துணை நடிகை கவிதாஸ்ரீ மற்றும் ஸ்ரீஜித்குமார் ஆகியோர் சேர்ந்து, மது விருந்தும், ஆபாச நடனமும் ஏற்பாடு செய்தது தெரிந்தது.சினிமா ஷூட்டிங் நடத்தும் பண்ணை வீட்டை, 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, மது விருந்து நடத்தி உள்ளனர். நடனமாட, 10 பெண்களை அழைத்து வந்ததுடன், விருந்தில் பங்கேற்போரிடம் தலா 5,000 ரூபாய் டிக்கெட் வசூலித்துள்ளனர். சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய 15 பேரை, போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.போலீசார் உத்தரவில், கானத்துார் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி தலைமையில் சென்ற அதிகாரிகள், பண்ணை வீட்டுக்கு சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X