பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் இருந்த நாடக மேடை அகற்றம்; நகராட்சி, போலீஸ் நடவடிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை பள்ளித்தெருவில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டிய நாடக மேடை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.சிவகங்கை பள்ளி தெருவில் திரவுபதி அம்மன் கோயில் எதிரே நகராட்சிக்கு சொந்தமான 22 அடி அகல நடை பாதை உள்ளது. 1995ல் இந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டு நாடக மேடை கட்டப்பட்டது.பள்ளி தெருவிலுள்ள வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் நகராட்சியில்

சிவகங்கை : சிவகங்கை பள்ளித்தெருவில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டிய நாடக மேடை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

சிவகங்கை பள்ளி தெருவில் திரவுபதி அம்மன் கோயில் எதிரே நகராட்சிக்கு சொந்தமான 22 அடி அகல நடை பாதை உள்ளது. 1995ல் இந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டு நாடக மேடை கட்டப்பட்டது.பள்ளி தெருவிலுள்ள வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் அளித்தனர்.நடைபாதையில் கட்டப்பட்ட நாடக மேடையை அகற்ற நகராட்சி முன்வரவில்லை.

அப்பகுதியை சேர்ந்த ஓய்வு இன்ஸ்பெக்டர் மனோகரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் பெஞ்ச், நகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள நாடக மேடையை அகற்ற உத்தரவிட்டது.நேற்று நகராட்சி கமிஷனர் அய்யப்பன்,கண்காணிப்பாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் 22 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த நாடக மேடையை அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X