அழிந்த சுந்தரமுடையான் தோட்டக்கலை பண்ணை l| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழிந்த சுந்தரமுடையான் தோட்டக்கலை பண்ணை l

Added : ஜூலை 20, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையான் மாதிரி தோட்டக்கலை பண்ணையில் ஆண்டுக்கு மூன்று லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்று மரக்கன்றுகளும் இல்லை. பராமரிப்பும் இல்லை என்ற பரிதாபத்தில் அழிந்து கொண்டிருக்கிறது.சுந்தரமுடையான் மாதிரி தோட்டக்கலை பண்ணை 20 ஏக்கரில் அமைந்துள்ளது. 1986 அக்.9ல் பண்ணை துவக்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
 அழிந்த சுந்தரமுடையான் தோட்டக்கலை பண்ணை l

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையான் மாதிரி தோட்டக்கலை பண்ணையில் ஆண்டுக்கு மூன்று லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்று மரக்கன்றுகளும் இல்லை. பராமரிப்பும் இல்லை என்ற பரிதாபத்தில் அழிந்து கொண்டிருக்கிறது.

சுந்தரமுடையான் மாதிரி தோட்டக்கலை பண்ணை 20 ஏக்கரில் அமைந்துள்ளது. 1986 அக்.9ல் பண்ணை துவக்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை இங்கு ஆண்டிற்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பழக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.பாலிஹவுஸ் அமைத்து சாலட் வெள்ளரி, மலர் சாகுபடி செய்து வருவாய் ஈட்டப்பட்டது. திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மரக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது.

மக்களின் தேவைக்காகஆந்திராவில் இருந்து குரோட்டன்ஸ் செடிகளை கொள்முதல் செய்து விற்று வந்தனர்.மா ஒட்டு ரகம் ரூ.60, கொய்யா ரூ.30, சப்போட்டா ஒட்டு ரூ.50, நெல்லி ஒட்டு ரூ.30, மாதுளை ரூ.20, அழகு செடிகள் (சிறிய பெட்டியுடன்) ரூ.20, மல்லிகை ரூ.5, புளி ஒட்டு ரூ.30, கறிவேப்பிலை ரூ.10, பப்பாளி ரூ.10, முந்திரி ஒட்டு ரூ.10, அனைத்து மரக்கன்றுகள் ரூ.10 என விற்கப்பட்டன.வெறிச்சோடிய பண்ணைசிறப்பாக செயல்பட்டு வந்த மாதிரி தோட்டக்கலை பண்ணை இன்று பராமரிப்பின்றி பாழ்பட்டு வருகிறது.

மரக்கன்றுகள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.பணியாற்றியவர்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.பசுமை குடிலின்பரிதாப நிலைமாதிரி தோட்டக்கலை பண்ணையில் 1000 ச.மீ., பரப்பில் பசுமை குடில் (பாலி ஹவுஸ்) அமைத்து வெள்ளரி, குடை மிளகாய், மல்லிகை, மேரிகோல்டு சாகுபடி செய்யப்பட்டது. பாலிஹவுஸ் முறையில் நோய் தாக்குதல் இருக்காது. தட்ப வெப்ப நிலையில் பாதிப்பு இருக்காது. பூச்சி நோய் தாக்குதல் ஏற்படாது.வழக்கமான உற்பத்தியைவிட மூன்று மடங்கு அதிக விளைச்சல் வருவாய் கிடைத்தது. இந்த பாலிஹவுஸ் இப்போது கிழிந்து கந்தலான நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது.

மாமரங்களாவது பராமரிக்கப்படுமா

பண்ணையில் 100க்கும் அதிகமான மாமரங்கள் உள்ளன. இவற்றில் சீசனில் நல்ல விளைச்சல் உள்ளது. அதே போல் மா ஒட்டு ரகம் தயாரிப்பது மட்டும் ஓரளவிற்கு நடந்துவருகிறது. பண்ணையில் உள்ள மாமரங்களையாவது பாதுகாக்க வேண்டும்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலட்சியம்தென் தமிழகத்திற்கே மரக்கன்றுகளையும், பழக்கன்றுகளையும் வழங்கியசுந்தரமுடையான் மாதிரி தோட்டக்கலை பண்ணை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில்உள்ளது.

இந்த பண்ணையை பராமரித்து மரக்கன்றுகளை வளர்க்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதி ஒதுக்கவில்லை.இதனால் பண்ணை பாழ்பட்டு வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பண்ணைக்கு புத்துயிர் அளித்து மீண்டும் முன்பு போல் ஆண்டிற்கு மூன்று லட்சம் கன்றுகளை வளர்த்து அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதற்கான திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செய்ய வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X