பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி சமணர் கோவிலில் இடிதாங்கி பொருத்தப்படுமா?

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் சமணர் கோவிலில், இடிதாங்கி பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் நகரம், சிவ, விஷ்ணு, சமண வழிபாடுகளை கொண்டிருந்தது. சிவ, விஷ்ணு கோவில்கள் காஞ்சிபுரத்தில் அதிகமுள்ள நிலையில், சமண மத கோவில்கள் குறைந்த அளவிலேயே உள்ளன.'ஜீன காஞ்சி' என்றழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர்

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் சமணர் கோவிலில், இடிதாங்கி பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் நகரம், சிவ, விஷ்ணு, சமண வழிபாடுகளை கொண்டிருந்தது. சிவ, விஷ்ணு கோவில்கள் காஞ்சிபுரத்தில் அதிகமுள்ள நிலையில், சமண மத கோவில்கள் குறைந்த அளவிலேயே உள்ளன.'ஜீன காஞ்சி' என்றழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர் ஜீன சுவாமி கோவில் உள்ளது; 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், முறையான பராமரிப்பின்றி, கோபுரங்களில் செடி, மரம் போன்றவை முளைத்துள்ளன. கோவிலில் இடிதாங்கி இல்லாததால், மழைக்காலங்களில் கோபுரங்கள் சேதமாக வாய்ப்புள்ளது.தவிர, கோவில் பாதுகாப்புக்கென, கேமரா, காவலாளி இல்லை. இக்கோவில் பாதுகாப்பு குறித்து, தொல்லியல் துறைக்கு சிலர் கடிதம் எழுதியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சமீபத்தில், காமாட்சியம்மன் கோவில் கோபுரம், இடி தாக்கி சேதமடைந்தது. அதுபோன்ற நிலை, இக்கோவில் கோபுரத்திற்கும் வராமல் இருக்க, இடிதாங்கி பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X