பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஆர்.எம்., பல்கலையில் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு,-காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் புரவலராக உள்ள தமிழ்ப்பேராயம், 10 ஆண்டுகளாக, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பல பணிகளைச் செயல்படுத்தி வருகிறது.சிறந்த படைப்பாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் அளவில் விருதுகள் வழங்குதல், சிறந்த நுால்களை அச்சிடுதல்,

செங்கல்பட்டு,-காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் புரவலராக உள்ள தமிழ்ப்பேராயம், 10 ஆண்டுகளாக, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பல பணிகளைச் செயல்படுத்தி வருகிறது.சிறந்த படைப்பாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் அளவில் விருதுகள் வழங்குதல், சிறந்த நுால்களை அச்சிடுதல், தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டுள்ளது.தற்போது, தமிழ் அர்ச்சகர் என்ற பாடப்பிரிவையும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் சேர்ந்து நடத்தி வருகிறது.புதிய முயற்சியாக, வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், காலை 11:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை, 'சிந்தனை அரங்கம்' என்ற தொடர் நிகழ்ச்சியை, www.srmist.edu.in என்ற இணைய வழியாக நடத்துகிறது.இதுவரை நடந்த 15 நிகழ்ச்சிகளில், தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் மட்டுமின்றி, அயல்நாட்டு அறிஞர்கள் பலரும் பங்கேற்று உரையாற்றி உள்ளனர்.தமிழகம் மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும், இணையவழியாக பலரும் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X