பொது செய்தி

தமிழ்நாடு

சர்வர் பழுது காரணமாக தடுப்பூசிக்காக காத்திருப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சிவகங்கை : சர்வர் பழுது காரணமாக வெளி நாடு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடியாமல் பல மணி நேரம் காத்திருந்தனர்.வெளிநாடு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கு பகுதியில் போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் ஒரே மையம் என்பதால் 200க்கும் மேற்பட்டோர் காலை7:30 மணிக்கே காத்திருந்தனர்.இணையதளத்தில் பதிவு செய்து

சிவகங்கை : சர்வர் பழுது காரணமாக வெளி நாடு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடியாமல் பல மணி நேரம் காத்திருந்தனர்.

வெளிநாடு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கு பகுதியில் போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் ஒரே மையம் என்பதால் 200க்கும் மேற்பட்டோர் காலை7:30 மணிக்கே காத்திருந்தனர்.இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போடுபவர்களின் அலைபேசிக்குஓ.டி.பி., எண் வந்த பிறகே போடப்படும். சர்வர் பழுது காரணமாக மதியம் 12:00 மணிவரை ஓ.டி.பி., எண் வராமல் காத்திருந்தனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது: மாவட்டம் முழுவதற்கும் ஒரே தடுப்பூசி மையம் என்பதால் கூட்டம் அதிகமாக உள்ளது. இதே போல் இரண்டு, மூன்று மையங்கள் ஏற்படுத்தினால் தடுப்பூசி போடுபவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வெளி நாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்த முன் வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X