ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

Added : ஜூலை 20, 2021
Share
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஊத்துகாடு கிராம அம்மன் கோவிலில், ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று முன்தினம், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.இதையறிந்த கோட்டாட்சியர் ராஜேஸ்வரி, 'ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகள் அமலில் உள்ளதால், கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கிராம

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஊத்துகாடு கிராம அம்மன் கோவிலில், ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று முன்தினம், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.இதையறிந்த கோட்டாட்சியர் ராஜேஸ்வரி, 'ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகள் அமலில் உள்ளதால், கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கிராம வி.ஏ.ஓ.,க்கள் குழுவில், பதிவு செய்துஉள்ளார். மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்தும் கண்டித்துள்ளார்.இதற்கு, 'அந்நிகழ்வுக்கு நாங்கள் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்' என, வி.ஏ.ஓ.,க்கள் தரப்பில் கூறியுள்ளனர்.பின், கோட்டாட்சியர் பதிவை கண்டிக்கும் வகையில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகா எல்லைக்குட்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை, நேற்று காலை முற்றுகையிட்டனர்.கோட்டாட்சியர், சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசியதில் உடன்பாடு ஏற்பட்டதால், நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை வி.ஏ.ஓ.,க்கள் ரத்து செய்து கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X