மானாமதுரை கோயில்களில் ஆடி திருவிழா ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை கோயில்களில் ஆடி திருவிழா ரத்து

Added : ஜூலை 20, 2021
Share
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்,வீர அழகர் கோயில்களில் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ஆடி திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மானாமதுரையில் சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன்,வீர அழகர் கோயில்களில் ஆடியில் 10 நாட்கள் தொடர்ந்து ஆடித்தபசு,பிரம்மோற்ஸவ விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்,வீர அழகர் கோயில்களில் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ஆடி திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மானாமதுரையில் சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன்,வீர அழகர் கோயில்களில் ஆடியில் 10 நாட்கள் தொடர்ந்து ஆடித்தபசு,பிரம்மோற்ஸவ விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு ஆடி திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

பக்தர்கள் சிலர் கூறுகையில்,கடந்தாண்டு சித்திரை ,ஆடி திருவிழா முற்றிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு உள் திருவிழாவாக நடத்தப்பட்டது சற்று ஆறுதலாக இருந்தது.இந்நிலையில் ஆடிதபசு மற்றும் பிரம்மோற்ஸவ விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுவாமி வீதியுலாவும் இல்லாதது மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளது, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X