பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத இருந்த 14,812 மாணவர்கள் தேர்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத இருந்த 14,812 மாணவர்கள் தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
ராமநாதபுரம் : மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத இருந்த 14,812மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2279 பெண்கள் உட்பட 3185 மாணவர்கள் 600க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர் ஒருவர் 588.14ம், அரசு பள்ளியில் 570.14 மதிப்பெண் அதிகபட்சமாக பெற்றுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம்

ராமநாதபுரம் : மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத இருந்த 14,812மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2279 பெண்கள் உட்பட 3185 மாணவர்கள் 600க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர் ஒருவர் 588.14ம், அரசு பள்ளியில் 570.14 மதிப்பெண் அதிகபட்சமாக பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் அரசு - 70, அரசு உதவிபெறும் -36, மெட்ரிக் பள்ளி - 46 என 152 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 14812 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயார் செய்து நேற்று முடிவு வெளியானது. இதில், அதிகபட்சமாக ராமநாதபுரம் தனியார் பள்ளி மாணவி 600க்கு 588.14 மற்றும் எமனேஸ்வரம் அரசு பள்ளி மாணவர் 570.41 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும் 500க்கு மேல் 2279 பெண்கள் உட்பட 3185பேரும், 400க்குமேல் 8946 பேரும், 300க்கு மேல் 2349 பேரும், 200க்கு மேல் 332 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.கடந்த 2019-20 கல்விஆண்டில் அதிகபட்சமாக தனியார் பள்ளியில் 585ம், அரசு பள்ளியில் 565 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மதிப்பெண் குறைந்துள்ளதாக கருதும் மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபரில் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஜூலை 22 ல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X