பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலைத்துறை - சிவகங்கை நகராட்சி மோதல் தேசிய நெடுஞ்சாலைத்துறை -சிவகங்கை நகராட்சி மோதல்/ 8 காலம்*ஒட்டு போட்டாச்சு! ரோடு ரெடியாகிடுச்சு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை-யில் மேம்பால சர்வீஸ் ரோட்டை சீரமைப்பதில் நகராட்சி,தேசிய நெடுஞ்சாலைத்துறை இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைத்துறையினரோ ரோட்டில் ஒட்டு போட்டாச்சு,ரோடு ரெடியாகிடுச்சு என்கின்றனர். நகராட்சியினரோ எங்களது வேலை முடிந்துவிட்டது என்கின்றனர். இவர்களால் மக்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.சிவகங்கை - தொண்டி ரோட்டில் ரயில்வே தண்டவாளம்

சிவகங்கை : சிவகங்கை-யில் மேம்பால சர்வீஸ் ரோட்டை சீரமைப்பதில் நகராட்சி,தேசிய நெடுஞ்சாலைத்துறை இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறையினரோ ரோட்டில் ஒட்டு போட்டாச்சு,ரோடு ரெடியாகிடுச்சு என்கின்றனர். நகராட்சியினரோ எங்களது வேலை முடிந்துவிட்டது என்கின்றனர். இவர்களால் மக்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.சிவகங்கை - தொண்டி ரோட்டில் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடும் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன் 24 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருபுறமும் மக்கள் பயன்பாட்டிற்காக சர்வீஸ் ரோடு ஒரு கி.மீ., துாரத்தில் அமைக்கப்பட்டது.5 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட இந்த ரோட்டை முறையான பராமரிப்பு செய்யாததாலும், நகராட்சியினர் பாதாள சாக்கடை குழாய் அடைப்பை சரிசெய்ய அடிக்கடி தோண்டியதால் ரோடு போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் பல இடங்களில் பள்ளமாகி விட்டது.

முக்கிய சாலை

இந்த சர்வீஸ் ரோட்டில் தான் நகராட்சி அலுவலகம், சப் கலெக்டர், நீதிபதி குடியிருப்பு, ரயில் நிலையம் உள்ளது. சுரங்கப்பாதை வழியாக ஆயுதப்படை குடியிருப்பு, போலீஸ் பயிற்சி கல்லுாரி, வாணியங்குடி ஊராட்சியில் உள்ள முல்லைநகர், ரோஸ்நகர் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு செல்ல முடியும். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ரோட்டில்சென்று வருகின்றன.

சாபக்கேடு

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலப்பணி செய்த ஒப்பந்தகாரர் 5 ஆண்டு இந்த ரோட்டை பராமரிக்க வேண்டும். அவர் முறையாக பராமரிப்பு செய்யாததால் இப்பகுதி மக்கள் தினமும் அவஸ்தைப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோ இந்த ரோட்டை வந்து ஆய்வு செய்ததே இல்லை.

ஒட்டு போட்டாச்சு: ரோடு ரெடி

ஆய்வுக்கு வந்த கலெக்டர் மதுசூதன்ரெட்டி ரோட்டின் பரிதாப நிலையை பார்த்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு நெருக்கடி கொடுத்ததின் பேரில் ஆங்காங்கே பள்ளங்களில் மண்ணை நிரப்பி ஒட்டு போட்டுள்ளனர்.பாதி பணியை மட்டுமே முடித்த நிலையில் குறையுமாக ரோடு ரெடியாகிடுச்சு இனி வாகனங்கள் தாராளமான செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ட்ராக்டரின் பராமரிப்பு பணி இந்த மாதத்துடன் முடிகிறது. அவர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் சாலையை ஒப்படைத்த பின்புஇந்த ரோடு முழுமையாக போடப்படும் என அதிகாரிகள் என்கின்றனர்.

செந்தில்குமார், பொறியாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை: தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் தற்போது பேட்ஜ் ஒர்க் நடந்துள்ளது. நகராட்சியினர் பாதாள சாக்கடை அமைப்பதற்காக மேன்ேஹால் அமைக்க உள்ளனர். அதற்காக ரோட்டை மீண்டும் தோண்ட வேண்டும். நகராட்சி பணி முடிந்த பின்பு முழுமையாக ரோடு போடப்படும், என்றார்.

அய்யப்பன், நகராட்சி கமிஷனர்: நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் அமைக்கும் போது எங்களது பாதாள சாக்கடை திட்ட மேன் ேஹால்களை சேதப்படுத்தியுள்ளனர். அதனை தற்போது சீரமைப்பு செய்து வைத்திருந்தோம். பேட்ஜ் ஒர்க் நடந்த போது மீண்டும் 3 பாதாள சாக்கடை மேன்ேஹால்களை மூடிவிட்டனர்.தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் அந்த மேன்ேஹால் பகுதியை சீரமைத்து தருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களது பணி நிறைவடைந்து விட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை தான் ரோடு போட வேண்டும், என்றார். தேசிய நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாக மோதலால் மக்கள் பாடு தான் திண்டாட்டமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X