நெருக்கடியில் தவிக்கும் இ- சேவை மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடியில் தவிக்கும் இ- சேவை மையம்

Added : ஜூலை 20, 2021
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தில் நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.புதிதாக கட்டப்பட்ட இத்தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் தலா 100 சதுர அடியில் இரண்டு அறைகளுடன் இ-சேவை மையத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது. ஒரு அறையில் ஆதார் சேவையும் மற்றொரு அறையில் இ-சேவை பணியும் மேற்கொள்ளப்படுகிறது. குறுகிய கட்டடம் என்பதால் வரிசையில்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தில் நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

புதிதாக கட்டப்பட்ட இத்தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் தலா 100 சதுர அடியில் இரண்டு அறைகளுடன் இ-சேவை மையத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது. ஒரு அறையில் ஆதார் சேவையும் மற்றொரு அறையில் இ-சேவை பணியும் மேற்கொள்ளப்படுகிறது. குறுகிய கட்டடம் என்பதால் வரிசையில் நிற்க முடியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாமலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அங்கு மக்களுக்கு பாதுகாப்பான இடவசதி இல்லாததால் வெயிலிலும் மழையிலும் காத்திருக்க வேண்டியுள்ளது.ஆதார் சேவைக்காக காலை 6:00 மணிக்கே வரும் மக்கள் அங்குள்ள பதிவேட்டில் தாங்களாகவே பெயர்களை வரிசைப்படி எழுதுகிறார்கள்.அலுவலர்கள் பதிவேடு வரிசைப்படி மக்களை அழைக்காமல் முண்டியடித்துக்கொண்டு வருபவர்களையும், தங்களுக்கு தெரிந்த நபர்களையும் அழைத்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

கைக்குழந்தையுடன் வருபவர்கள் முதியவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தோடு சேவைகளை முடித்துக் கொள்வதால் 30 கி.மீ., க்கு அப்பால் இருந்து வரும் மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X