பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள் 

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மீன்பிடி புறக்கணிப்புமாமல்லபுரம்: தேசிய கடல் மீன்பிடிப்பு சட்டத்தை கண்டித்து, மீனவர்கள் நேற்று, மீன்பிடி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி, தொழிலை புறக்கணித்தனர்.மத்திய அரசு, கடற்பகுதி பாதுகாப்பு கருதி, மீனவர் மீன்பிடி தொழிலை வரைமுறைப்படுத்த, இச்சட்டத்தை இயற்றியுள்ளது. நேற்று, லோக்சபா கூட்டத்தில், தாக்கல் செய்ய ஏற்பாடானது. இச்சட்டத்தால், தங்களின், மீன்பிடி தொழில்,

மீன்பிடி புறக்கணிப்புமாமல்லபுரம்: தேசிய கடல் மீன்பிடிப்பு சட்டத்தை கண்டித்து, மீனவர்கள் நேற்று, மீன்பிடி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி, தொழிலை புறக்கணித்தனர்.

மத்திய அரசு, கடற்பகுதி பாதுகாப்பு கருதி, மீனவர் மீன்பிடி தொழிலை வரைமுறைப்படுத்த, இச்சட்டத்தை இயற்றியுள்ளது. நேற்று, லோக்சபா கூட்டத்தில், தாக்கல் செய்ய ஏற்பாடானது. இச்சட்டத்தால், தங்களின், மீன்பிடி தொழில், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, மீனவர்கள் கவலையுற்றனர்.சட்ட வரைவை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட, மீனவ பகுதிகளில், மீனவ அமைப்பினர், தி.மு.க., சார்பு மீனவர், மீன்பிடி படகுகளில், கருப்பு கொடியேற்றி, தொழிலை புறக்கணித்தனர்.பணி நியமன ஆணை வழங்கல்உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவான்பாடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; கடந்த, 2018ல் அரசாணிமங்கலம் ஊராட்சி செயலராக பணியாற்றியபோது காலமானார்.

அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில், கருணை அடிப்டையில் வெங்கடேசனின் மனைவி அமுதாவிற்கு வேலை வாய்ப்பு வழங்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி நியமன ஆணையை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, நேற்று, அமுதாவிடம் வழங்கினார்.டி.ஆர்.ஓ., பொறுப்பேற்புசெங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த பிரியா, சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில், இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.

தொடந்து, சென்னை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் அலுவலகத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மேனுவல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமித்து, கடந்த, 10ம் தேதி, அரசு உத்தரவிட்டது. நேற்று, அவர், பொறுப்பேற்றுக்கொண்டார்.செங்கை எஸ்.பி., அறிவுரைமாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் சிற்பங்களை, சுற்றுலாப் பயணியர் காண்கின்றனர். வார இறுதி நாட்களில், பயணியர் குவியும் நிலையில், போலீசார் கண்காணிப்பது அவசியம். இங்கு கடற்கரை சாலை, பழைய சிற்பக் கல்லுாரி சாலை, கிழக்கு ராஜ வீதி என, முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதியில், பஸ் நிலையம் உள்ளது.பயணியர் பாதுகாப்பு, போக்குவரத்து கண்காணிப்பு கருதி, பஸ் நிலையத்தில், பல ஆண்டுகளுக்கு முன், போலீசார் கண்காணிப்பகம் அமைத்தனர். இதை பயன்படுத்தாமலே சீரழிந்து அகற்றப்பட்டது.இந்நிலையில், இப்பகுதியை பார்வையிட்ட, போலீஸ் எஸ்.பி., விஜயகுமார், பேரூராட்சி நிர்வாகம் மூலம் இடம் ஒதுக்கி, மீண்டும் கண்காணிப்பகம் அமைக்க, மாமல்லபுரம் போலீசாரிடம் நேற்று முன்தினம் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X