சட்ட விரோத இணைப்பு அபராதம் விதிக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோத இணைப்பு அபராதம் விதிக்க உத்தரவு

Added : ஜூலை 20, 2021
Share
மாமல்லபுரம்-செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை அமைத்து, வீடுகள், விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு இணைப்பு வழங்குகிறது.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாமல்லபுரம் பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம்ஸ் ஏசுதாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோரிடம், பாதாள சாக்கடை

மாமல்லபுரம்-செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை அமைத்து, வீடுகள், விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு இணைப்பு வழங்குகிறது.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாமல்லபுரம் பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம்ஸ் ஏசுதாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோரிடம், பாதாள சாக்கடை அமைப்பதன் நிர்வாக நடைமுறை, பணிகள் விபரம் குறித்து கேட்டறிந்தார்.வீடு, விடுதி, கடை உள்ளிட்ட கட்டடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாதாள சாக்கடை இணைப்பு வழங்காதது குறித்து, அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.அதற்கு அதிகாரிகள், 'பெரும்பாலான கட்டடங்கள், புறம்போக்கு பகுதியில் அமைந்து, கட்டட அங்கீகாரம் பெறாமல் உள்ளதால், இணைப்பு வழங்க முடியாத நிலை உள்ளது' என தெரிவித்தனர்.தொடர்ந்து, 'அங்கீகாரம் பெறாத கட்டடங்களுக்கு, மின் இணைப்பு வழங்கப்பட்டது எப்படி? அத்தகைய கட்டடங்களை இடிக்கலாம்' என, கலெக்டர் ஆலோசனை கூறினார்.தொடர்ந்து, பூஞ்சேரி பகுதி, கழிவு நீர் சுத்திகரிப்புவளாகத்தில் ஆய்வு செய்தஅவர், இப்பகுதியை துாய்மைப்படுத்த அறிவுறுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X