சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாதனங்கள் பழுது; தேனியில் மக்கள் மறியல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தேனி : தேனியில் வீடுகளில் திடீரென மின்சாதனங்கள் பழுதானதால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.தேனி அல்லிநகரம் நகராட்சியின் 6வது வார்டு ஹைஸ் கூல் தெரு விரிவாக்கப்பகுதி உள்ளது. 60க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. நேற்று மாலை வீசிய பலத்தகாற்றில் மின் பாதை ஒயர்கள் உரசிக்கொள்ளும் வகையில் முருங்கை மரம் விழுந்ததால் அதன் தொடர்ச்சியாக 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மிக்சி,

தேனி : தேனியில் வீடுகளில் திடீரென மின்சாதனங்கள் பழுதானதால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சியின் 6வது வார்டு ஹைஸ் கூல் தெரு விரிவாக்கப்பகுதி உள்ளது. 60க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. நேற்று மாலை வீசிய பலத்தகாற்றில் மின் பாதை ஒயர்கள் உரசிக்கொள்ளும் வகையில் முருங்கை மரம் விழுந்ததால் அதன் தொடர்ச்சியாக 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மிக்சி, டிவி, பேன், ஸ்பீக்கர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைந்தன.

இதனால் மக்கள் பெரியகுளம்- - தேனி ரோட்டில் அவற்றுடன் மறியலில் ஈடுபட்டனர். மின்துறை உதவி செயற்பொறியாளர் தங்கப்பாண்டியன் ஆய்வு செய்து ஒயர்கள் சீரமைக்கப்பட்டன. அல்லிநகரம் போலீசார் பேசினர். சம்பவத்தின்போது அலைபேசி 'டவர்' ஜெனரேட்டர் பகுதியில் சப்தம் கேட்டதால் அங்கு பணியில் இருந்தவரிடம் விசாரிக்கப்படும் என பொறியாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X