தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 12 ம் வகுப்பில் 21 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 12 ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கொரோனா பரவலால் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கமிட்டி அமைத்து மதிப்பெண் வழங்கும் முறை முடிவானது. அதன்படி 12 ம் வகுப்பு செய்முறை தேர்வில் 30 மதிப்பெண், 11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்ணில் 20 சதவீதம், 10 ம் வகுப்பில்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 12 ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கொரோனா பரவலால் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கமிட்டி அமைத்து மதிப்பெண் வழங்கும் முறை முடிவானது. அதன்படி 12 ம் வகுப்பு செய்முறை தேர்வில் 30 மதிப்பெண், 11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்ணில் 20 சதவீதம், 10 ம் வகுப்பில் அதிகபட்சம் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம் சேர்த்து 12 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதன்படி 12 ம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரம் நேற்று (ஜூலை 19) வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9 ஆயிரத்து 934, மாணவிகள் 11 ஆயிரத்து 188 மொத்தம் 21 ஆயிரத்து 122 பேர் தேர்வு எழுத இருந்தனர். தேர்வின்றி மதிப்பெண் வழங்கும் முறையால் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அலைபேசி வாயிலாகவும், இன்டர்நெட் சென்டர்களிலும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை பார்த்து மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X