போலீசாரின் குழந்தைகளை பாதுகாக்க காப்பகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் குழந்தைகளை பாதுகாக்க காப்பகம்

Added : ஜூலை 20, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பயன்படாமல் இருந்த பழைய கட்டடத்தை போலீஸ் குழந்தைகள் காப்பகமாக மாற்றியுள்ளார் எஸ்.பி., ரவளிப்பிரியா.போலீசாருக்கு 24 மணி நேரமும் பணி இருக்கும். இதில் அவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என்பது சிரமமான காரியம். இதில் உள்ள சிரமத்தை உணர்ந்த மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பயன்படாத ஓய்வறை கட்டடத்தை குழந்தைகள்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பயன்படாமல் இருந்த பழைய கட்டடத்தை போலீஸ் குழந்தைகள் காப்பகமாக மாற்றியுள்ளார் எஸ்.பி., ரவளிப்பிரியா.

போலீசாருக்கு 24 மணி நேரமும் பணி இருக்கும். இதில் அவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என்பது சிரமமான காரியம். இதில் உள்ள சிரமத்தை உணர்ந்த மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பயன்படாத ஓய்வறை கட்டடத்தை குழந்தைகள் காப்பகமாக மாற்றிவிட்டார்.

பணிக்கு செல்லும் போலீசார் குழந்தைகளை கவனிக்க யாரும் இல்லையெனில், இங்கு விட்டுச் செல்லலாம்.குழந்தைகளை பாதுகாக்க கண்காணிப்பு கேமரா உட்பட பாதுகாவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளின் பொழுது போக்கிற்காக அறையில் அவர்களை கவரும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இது ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது போலீசாருக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X