பொது செய்தி

தமிழ்நாடு

'கருணை காட்டுங்கள்': கலெக்டரிடம் மனு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள்; இல்லையெனில் கருணை கொலைக்கு அனுமதியுங்கள்' என, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணமனுாரை சேர்ந்த 7 ம் வகுப்பு மாணவர் மனோஜ் மனு கொடுத்தார்.இம்மாணவர் ஆவிலிபட்டியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கிறார். நேற்று பெற்றோருடன் வந்து மனு கொடுத்த அவர் கூறியது: கடந்த 4 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

திண்டுக்கல் : 'மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள்; இல்லையெனில் கருணை கொலைக்கு அனுமதியுங்கள்' என, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணமனுாரை சேர்ந்த 7 ம் வகுப்பு மாணவர் மனோஜ் மனு கொடுத்தார்.

இம்மாணவர் ஆவிலிபட்டியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கிறார். நேற்று பெற்றோருடன் வந்து மனு கொடுத்த அவர் கூறியது: கடந்த 4 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவ சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. எந்த நேரத்தில் வலிப்பு வரும் என தெரியாது.எனது பெற்றோர் கூலி வேலை பார்க்கின்றனர்.

மருத்துவத்திற்காக அதிக கடன் பெற்றுள்ளனர். என்னால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவால் மருத்துவ சிகிச்சையும் பெற முடியவில்லை. அரசு சார்பில் எனது மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள். இல்லையெனில் கருணை கொலை கூட செய்ய பரிந்துரைக்க வேண்டும் என, கூறியிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X