குடும்பத்தினர் போராட தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடும்பத்தினர் போராட தடை

Added : ஜூலை 20, 2021
Share
வடமதுரை : அய்யலுார் வேங்கனுாரை சேர்ந்த உறவினர்கள் பழனிச்சாமி, தர்மலிங்கம் இடையே சொத்து தொடர்பாக பிரச்னை உள்ளது.தர்மலிங்கம் தரப்பிற்கு சாதகமாக 2015ல் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும் தொடர்புடைய இடத்தை அனுபவிக்கவிடாமல் எதிர் தரப்பினர் பிரச்னை செய்வதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீஸ், வருவாய்த்துறையினரிடம் தர்மலிங்கம் தரப்பில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

வடமதுரை : அய்யலுார் வேங்கனுாரை சேர்ந்த உறவினர்கள் பழனிச்சாமி, தர்மலிங்கம் இடையே சொத்து தொடர்பாக பிரச்னை உள்ளது.

தர்மலிங்கம் தரப்பிற்கு சாதகமாக 2015ல் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும் தொடர்புடைய இடத்தை அனுபவிக்கவிடாமல் எதிர் தரப்பினர் பிரச்னை செய்வதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீஸ், வருவாய்த்துறையினரிடம் தர்மலிங்கம் தரப்பில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து கருப்புக்கொடி கட்டி குடும்பத்துடன் உண்ணாவிரதம் நேற்று இருக்க போவதாக தெரிவித்திருந்தனர். வடமதுரை இன்ஸ்பெக்டர் தெய்வம் தொடர்புடைய குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தவறு, கொரோனா காலத்தில் யாருக்கும் அனுமதியும் கிடையாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி போராட்டத்தை கைவிட செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X