பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளகவிக்கு ரோடு; கிராமத்தினர் வலியுறுத்தல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : வட்டக்கானல் வரை ரோடு வசதி கேட்டு கொடைக்கானல் வெள்ளகவி கிராமத்தினர் திண்டுக்கல்லில் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பது: வெள்ளகவியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு விளையும் ஏலக்காய், காபி, வாழை, மிளகு, எலுமிச்சையை தலைச்சுமையாக 8 கி.மீ., கொண்டு செல்லும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கொடைக்கானல், பெரியகுளத்திற்கு நடந்து

திண்டுக்கல் : வட்டக்கானல் வரை ரோடு வசதி கேட்டு கொடைக்கானல் வெள்ளகவி கிராமத்தினர் திண்டுக்கல்லில் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பது: வெள்ளகவியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு விளையும் ஏலக்காய், காபி, வாழை, மிளகு, எலுமிச்சையை தலைச்சுமையாக 8 கி.மீ., கொண்டு செல்லும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கொடைக்கானல், பெரியகுளத்திற்கு நடந்து செல்கின்றனர்.

ரோடு வசதியில்லாததால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.உடல்நிலை பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன்பே உயிரிழப்புகளும் நடக்கிறது. ரோடு வசதி கேட்டு 50 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஓராண்டுக்கு முன்பு வட்டக்கானல் - வெள்ளகவி வரை ரோடு வடிவமைப்பு பணி நடந்தது. விரைவில் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X