பொது செய்தி

தமிழ்நாடு

'யாரையும் நம்பி ஏமாறாதீங்க' : கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பழநி : 'பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்கள், பள்ளி, கல்லூரிகளில் வேலை வாங்கி தருவதாக கூறுவோரை நம்பி ஏமாறாதீங்க' என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு உபகோயில்கள், பாலிடெக்னிக், கலை, பண்பாட்டு கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி, பள்ளிகள் என பல்வேறு சார்பு நிறுவனங்கள் இயங்குகின்றன.

பழநி : 'பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்கள், பள்ளி, கல்லூரிகளில் வேலை வாங்கி தருவதாக கூறுவோரை நம்பி ஏமாறாதீங்க' என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு உபகோயில்கள், பாலிடெக்னிக், கலை, பண்பாட்டு கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி, பள்ளிகள் என பல்வேறு சார்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் காலிப்பணியிடங்களை நிரப்ப நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும்.

முறையாக சட்டவிதிகளை பின்பற்றி விண்ணப்பங்கள் பெற்று தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்வர்.ஆனால் தற்போது பழநி முருகன் கோயில், உப கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகளில் வேலை பெற்று தருவதாக சிலர் கூறி வருவதாக கோயில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், ''கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், பாலிடெக்னிக், பள்ளிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக தனிப்பட்ட எந்த நபரையும் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம்'' என அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X