தமிழ்நாடு

திண்டுக்கல்லில் இருபாலருக்குமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையுமா?

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருபாலருக்குமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை பள்ளிகள் மொத்தம் 212 உள்ளன. இங்கிருந்து ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவர்களுக்கென மாவட்டத்தில்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருபாலருக்குமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை பள்ளிகள் மொத்தம் 212 உள்ளன. இங்கிருந்து ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவர்களுக்கென மாவட்டத்தில் பொறியியல் கல்லுாரிகள் 5, கலை கல்லுாரிகள் 12, நர்சிங் கல்லுாரிகள் 3, பாலிடெக்னிக் கல்லுாரிகள் 3, பல்கலை கழகங்கள் 2 உள்ளன.

திண்டுக்கல், நிலக்கோட்டையில் பெண்களுக்கு மட்டுமே அரசு கலை கல்லுாரி உள்ளது. வேடசந்துாரில் உள்ள மதுரை காமராஜர் பல்கலை உறுப்பு கல்லுாரி கடந்த ஆட்சியில் இருபாலருக்குமான அரசு கலை கல்லுாரியாக மாற்றப்பட்டது. இருப்பினும் இதுநாள் வரை அங்கு மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. கல்வி பாதிப்புமேலே உள்ள கல்லுாரிகளில் இடம் கிடைக்காதவர்கள் தனியார், உதவி பெறும் கல்லுாரிகளை நம்பியே உள்ளனர். அங்கும் இடம் கிடைக்காத மாணவர்கள் மதுரை, தேனி, கோவை, திருச்சி, விருதுநகர் என வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

ஆனால் வெளியூர் செல்ல பல மாணவர்களின் பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழ்நிலை ஒத்துழைப்பதில்லை.இதனால் பலர் படிப்பை பாதியிலேயே விடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை தவிர்க்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எளிதில் வந்து செல்லும் இடமான திண்டுக்கல்லில் இருபாலருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் கனவான அரசு மருத்துவ கல்லுாரியை போல், கலை கல்லுாரியும் அமைத்தால் ஏழை மாணவர்கள் பலர் பயனடைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X