பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வின்ச் ஸ்டேஷனில் மயில்கள்பழநி: மலைக்கோயிலில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். படிப்பாதை, வின்ச் மூலம் மேலே செல்லும் பக்தர்கள் ஆங்காங்கே மயில்களின் நடமாட்டத்தை கண்டு பரவசம் அடைகின்றனர். குறிப்பாக வின்ச் வழியாக செல்லும் பக்தர்கள் மலைசரிவுகளில் நடனமாடும் மயில்களை குழந்தைகளிடம் காண்பித்துக் மகிழ்ச்சி அடைகின்றனர். மயில்களும் ஒய்யாரமாக

வின்ச் ஸ்டேஷனில் மயில்கள்

பழநி: மலைக்கோயிலில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். படிப்பாதை, வின்ச் மூலம் மேலே செல்லும் பக்தர்கள் ஆங்காங்கே மயில்களின் நடமாட்டத்தை கண்டு பரவசம் அடைகின்றனர். குறிப்பாக வின்ச் வழியாக செல்லும் பக்தர்கள் மலைசரிவுகளில் நடனமாடும் மயில்களை குழந்தைகளிடம் காண்பித்துக் மகிழ்ச்சி அடைகின்றனர். மயில்களும் ஒய்யாரமாக நடந்து செல்வது பழநி மலையை எழிலாக்குகிறது.

டிராக்டர்கள் பறிமுதல்

குஜிலியம்பாறை: கரிக்காலி ஊராட்சி கவுண்டனுார் குளத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குஜிலியம்பாறை எஸ்.ஐ.,மலைச்சாமி தலைமையில் போலீசார் இரவு நேரத்தில் சென்றனர். டிராக்டர்களில் மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் மற்றும் டிராக்டர் ஓட்டுனர்கள் தப்பியோடினர். இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை

நெய்க்காரப்பட்டி: பழநி சின்னகலையம்புத்தூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி 37. குடும்ப பிரச்னை காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதில் உயிரிழந்தார். நெய்க்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒருவர் கைது

பழநி: கடந்த ஜூலை 13 ல் வையாபுரி குளத்தின் அருகே பாரிலிருந்து ஆயக்குடி துர்க்கைவேல் வெளியே வந்தார். இவரிடம் சிலர் அலைபேசி, பணத்தை வழிப்பறி செய்தனர். போலீசார் இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். இதேவழக்கில் மதனபுரம் ஐயப்பன் மகன் ஜீவானந்தம் 21, நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சவடமுத்து தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். '2020 ல் மானாவாரியாக மக்காச்சோளம், கடலை பயிரிட்டோம். மழையின்றி பயிர்கள் அனைத்தும் காய்ந்து விட்டன. இதன் பின் வெங்காயம் பயிரிட்டோம். மழை பெய்ததில் வெங்காயம் சேதமானது. உரிய காப்பீடு செய்துள்ளோம். எனவே காப்பீடு செய்த தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேதமடைந்த பள்ளிவாசல் தெரு

கொடைக்கானல்: பள்ளிவாசல் தெருவில் சில ஆண்டுக்கு முன் அமைத்த பேவர் பிளாக் மற்றும் கான்கிரீட் சிதிலமடைந்துள்ளது. பாதசாரிகள், வாகனங்கள் தடுமாறுகின்றன. நுழைவு பகுதியை சிலர் கழிப்பிடமாகவும் மற்றும் பாராகவும் பயன்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். சேதமடைந்த ரோட்டை சீரமைத்து, தகாத செயல்களை தவிர்க்க வேண்டும்.

விழிப்புணர்வு முகாம்

செம்பட்டி: ஆத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இயற்கை வேளாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.சப்கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்தார். உதவி இயக்குனர் உமா வரவேற்றார். துணை கலெக்டர் விசுவநாதன், திட்ட செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் அமலா பேசினார். ஆத்தூரரில் காலாபாத், தூயமல்லி உள்ளிட்ட நாட்டு நெல் ரகங்களை விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.

பராமரிப்பற்ற வாரச்சந்தை

கொடைக்கானல்: ஞாயிறு தோறும் பி.டி., ரோட்டில் வாரச்சந்தை செயல்படுகிறது. பராமரிப்பற்ற கழிப்பறை மற்றும் குடிநீர், மின் வசதி ஏதுமின்றி வெறுமனே செயல்படுகிறது. இந்த சந்தைக்கும் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேதமடைந்த கூரையால் மழை பெய்யும் போது வியாபாரிகளும், பொதுமக்களும் அல்லல்படுகின்றனர். வாரச்சந்தையை மேம்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X