பொது செய்தி

தமிழ்நாடு

அய்யலுாரில் புள்ளிமான் உலா

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வடமதுரை : அய்யலுாரில் துள்ளித் திரிந்த புள்ளிமானை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.புத்துார், கோம்பை மலைகளில் உருவாகும் வரட்டாறுகள் கெங்கையூரில் ஒன்று சேர்ந்து கோடாங்கிசின்னான்பட்டி, குளத்துபட்டி கிராமங்களையொட்டி பயணித்து தென்னம்பட்டி வழியே குடகனாற்றில் சேர்கிறது.குளத்துபட்டி வரட்டாற்றில் திடீரென புள்ளி மான் ஒன்று வேகமாக ஓடி கடந்து சென்றது. இதை எதிர்பாராத

வடமதுரை : அய்யலுாரில் துள்ளித் திரிந்த புள்ளிமானை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

புத்துார், கோம்பை மலைகளில் உருவாகும் வரட்டாறுகள் கெங்கையூரில் ஒன்று சேர்ந்து கோடாங்கிசின்னான்பட்டி, குளத்துபட்டி கிராமங்களையொட்டி பயணித்து தென்னம்பட்டி வழியே குடகனாற்றில் சேர்கிறது.குளத்துபட்டி வரட்டாற்றில் திடீரென புள்ளி மான் ஒன்று வேகமாக ஓடி கடந்து சென்றது. இதை எதிர்பாராத அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்னர். புள்ளி மானை நாய், வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க வலியுறுத்தினர். வனத்துறையினர் அப்பகுதி கிராமங்களில் விசாரித்தனர்.

வனச்சரக அலுவலர் குமரேசன் கூறுகையில், ''இப்பகுதி மலைகளில் புள்ளி மான் இல்லை. வழி தவறி வந்த மான் தண்ணீர் கரடு பகுதிக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மானை கண்டறிந்து பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X