கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எச்.ராஜா முன்ஜாமின் மனு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மெய்யபுரத்தில் 2018 செப்.,15 ல் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உட்பட சிலர் தற்காலிக மேடை அமைத்து சட்டவிரோதமாகக்கூடி, காவல்துறை, உயர்நீதிமன்றத்தை விமர்சித்து, பொது ஊழியரை கடமை செய்யவிடாமல்
 எச்.ராஜா முன்ஜாமின் மனு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மெய்யபுரத்தில் 2018 செப்.,15 ல் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உட்பட சிலர் தற்காலிக மேடை அமைத்து சட்டவிரோதமாகக்கூடி, காவல்துறை, உயர்நீதிமன்றத்தை விமர்சித்து, பொது ஊழியரை கடமை செய்யவிடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்ததாக திருமயம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.எச்.ராஜா, காரைக்குடி சூரியநாராயணன்,'அரசியல் உள்நோக்கில் எங்கள் மீது தவறாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

முன்ஜாமின் அனுமதிக்க ஆட்சேபித்து சென்னை வழக்கறிஞர் துரைசாமி மனு செய்தார்.நீதிபதி ஜி.சந்திரசேகரன் விசாரித்தார். தமிழக அரசுத் தரப்பு, 'எச்.ராஜா மீது மாநிலத்தின் பல்வேறு ஸ்டேஷன்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது,' என ஆட்சேபம் தெரிவித்தது.

நீதிபதி: மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X