மும்பை: ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர்.
சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்., மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆபாச படங்களை தயாரித்து, விநியோகம் செய்ததாக கடந்த பிப்., மாதம் தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு பின்னர் ராஜ்குந்த்ரா நேற்று(ஜூலை19) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக அவர் உள்ளது தெரியவருகிறது. அவருக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இதனை மறுத்துள்ள ராஜ்குந்த்ரா, ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE