சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூபாய் 50 லட்சம் ‛ஆட்டைய' போட்ட மத்திய அமைச்சரின் ‛மாஜி' உதவியாளர்!

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பெயரைக் கூறி 50 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக பா.ஜ. ஆரணி நகர தலைவர் புவனேஷ்குமார் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.இது குறித்து புவனேஷ்குமார் கூறியதாவது:மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த கிஷன் ரெட்டி தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் தமிழக பா.ஜ. பொறுப்பாளராக
ரூ.50 லட்சம், மத்திய அமைச்சரிர்,மாஜிஉதவியாளர், கிஷன் ரெட்டி

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பெயரைக் கூறி 50 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக பா.ஜ. ஆரணி நகர தலைவர் புவனேஷ்குமார் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இது குறித்து புவனேஷ்குமார் கூறியதாவது:மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த கிஷன் ரெட்டி தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் தமிழக பா.ஜ. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தேர்தல் நெருக்கத்தில் சென்னை தி.நகரில் உள்ள பங்களாவில் தங்கினார். அப்போது வடசென்னை அ.தி.மு.க. துணைச செயலர் விஜயராமன் எனக்கு அறிமுகமானார்.


சந்திப்புகிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் வாயிலாக கிஷன் ரெட்டியை சந்திக்க வைத்தார்; அனைவரும் நன்றாக பழகினர். ஒரு கட்டத்தில் மத்திய அரசின் வாரியம் ஒன்றில் உறுப்பினர் பதவி வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறினர்; கேட்ட பணத்தை கொடுக்க தயாரானேன். சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் ‛தேர்தலில் போட்டியிட அமைச்சர் வாய்ப்பு வழங்குவதாக கூறுகிறார்' என நரோத்தமன் கூறினார். வற்புறுத்தலுக்கு பின் ஒப்புக் கொண்டேன். ஆரணி தொகுதியில் போட்டியிட விரும்பி சுய விபரக்குறிப்பு கொடுத்தேன். ஒரு கோடி ரூபாய் கேட்டனர்; அவ்வளவு முடியாது. முதலில் 50 லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்றதும் உடனே பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறினர். பணத்துடன் சென்ற என்னை அங்கே ஒரு தனி அறையில் தங்க வைத்தனர்; பின் பணத்தை கேட்டனர். கொடுக்க மறுத்ததும் 'சீட்' அறிவிக்கப்பட்டதும் கொடுத்தால் போதும் என்றனர். அங்கு பணத்துடன் தங்கி இருந்தேன். முதல் கட்டமாக பா.ஜ.வுக்கான தொகுதிகளை அ.தி.மு.க. அறிவித்தது. அந்த பட்டியலில் ஆரணி இல்லை; திருவண்ணாமலை வந்திருக்கிறது. அங்கு போட்டியிடுங்கள் என வற்புறுத்தினர்; மறுத்து விட்டேன்.


latest tamil news

வாபஸ்உடனே திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ. துணை தலைவரான என் சகோதரி வசந்திக்கு அங்கு போட்டியிட சீட் வாங்கி தருகிறோம் என 'ரூட்'டை மாற்றினர். சகோதரியிடம் கேட்டேன்; அவரும் ஆர்வமானார். இதையடுத்து அவர்கள் 50 லட்சம் ரூபாயை வாங்கி விட்டனர். பா.ஜ. வேட்பாளர் பட்டியல் வெளியானது. திருவண்ணாமலைக்கு தணிகை வேலு வேட்பாளராகி விட்டார். இருந்தாலும் வசந்தியை வேட்பு மனு தாக்கல் செய்யும்படி கூறினர்; அதன்படி செய்தோம். தணிகை வேலு வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் வாபஸ் வாங்கி விட்டோம். முழுமையாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து விஜயராமன் நரோத்தமனிடம் பணத்தை திருப்பி கேட்டோம்; காலம் கடத்தினர்.

தி.நகரில் தேர்தல் வேலையில் இருந்த கிஷன் ரெட்டியை சந்தித்து நடந்ததை கூறினோம். அவர் நரோத்தமனின் தந்தை சிட்டிபாபுவை அழைத்து 'பணத்தை செட்டில் செய்து விடுங்கள்' என்றார்; அவர்கள் செய்யவில்லை. மீண்டும் கிஷன் ரெட்டியை சந்தித்து முறையிட்டோம். அவர் போலீசில் புகார் செய்யும்படி சொன்னதால் புகார் செய்தோம்.


தள்ளுபடிதேர்தல் கொரோனா காலத்தால் புகார் பதியப்படாமல் இழுத்துக் கொண்டே போனது. 15 நாட்களுக்கு முன் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. தி.நகர் போலீஸ் துணை ஆணையரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு புகாரை அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பின்பே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர்.தற்போது கிஷன் ரெட்டி கேபினட் அமைச்சராகி விட்டார். கூடவே தன் உதவியாளர் பொறுப்பில் இருந்து நரோத்தமனை நீக்கி விட்டார். முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடியானது. உடனே அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.இருந்தாலும் முதற்கட்டமாக ஓட்டலில் இருக்கும் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து பதிவுகளை பெற்றுள்ளனர். அடுத்த கட்டமாக விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


விரைவில் பிடிப்போம்!நரோத்தமன் விஜயராமன் சிட்டிபாபு குழுவினர் புவனேஷ்குமார் மட்டுமல்ல 'சீட்' வாங்கி கொடுப்பதாக கூறி பலரையும் ஏமாற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக சொல்கின்றனர். முதற்கட்டமாக ஆரணி புவனேஷ்குமார் புகாரை விசாரித்த வரை சம்பவம் நடந்திருப்பது உண்மை என தெரிகிறது. சம்பந்தப்பட்ட ஓட்டலின் 'சிசிடிவி' பதிவுகளை பார்த்திருக்கிறோம்; ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை விரைவில் பிடித்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

- ராஜேந்திர பிரசாத்

எஸ்.ஐ. பாண்டி பஜார் காவல் நிலையம்பா.ஜ. தலைமை அதிருப்திஇந்த பிரச்னையை தமிழக பா.ஜ. முக்கிய தலைவர்களிடம் புவனேஷ்குமார் எடுத்து சென்றுள்ளார். ஆனாலும் பிரச்னை தீராததால் கிஷன் ரெட்டியின் வலியுறுத்தலை அடுத்து போலீசுக்கு சென்றுள்ளார். போலீசில் புகார் கொடுத்ததால் தமிழக பா.ஜ. தலைவர்கள் புவனேஷ்குமார் மீது அதிருப்தியில் உள்ளனர்.

-- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
20-ஜூலை-202120:26:23 IST Report Abuse
m.viswanathan மக்கள் பணி எண்டால் இப்படித்தான் இருக்கவேண்டும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-ஜூலை-202115:19:06 IST Report Abuse
Vena Suna ஆட்டையை போடறவனுங்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கணும்...
Rate this:
Cancel
20-ஜூலை-202114:57:36 IST Report Abuse
Saikumar C Krishna அரசியல் ஒரு சாக்கடை. பஜக அதற்கு ஒரு விதிவிலக்கு என்று நினைத்தேன். இல்லை நாங்களும் சாக்கடையில் ஊறிய மட்டைகள்தான் என்று ஒரிரு வருடங்களில் தெள்ள தெளிவான பிறகு அக்கட்சியின் மீதிருந்த விசுவாசம் அறவே போய்விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X