ஏற்கனவே 7 அடி உயரம் இருப்பீர்கள். இன்னும் வளர்ந்தால் நன்றாக இருக்காது என அதிமுக நினைத்து இருக்குமோ...

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,விடம் தென்மாவட்டங்களில் ஒரு தொகுதி கேட்டேன்; ஆனால், எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நான் வளர்ந்து விடக்கூடாது என்ற வகையிலும், நாங்கள் விரும்பாத எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர்.- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன்'ஏற்கனவே, 7 அடி உயரம் இருப்பீர்கள்... இன்னும் வளர்ந்தால் நன்றாக
ஏற்கனவே 7 அடி உயரம் இருப்பீர்கள். இன்னும் வளர்ந்தால் நன்றாக இருக்காது என அதிமுக நினைத்து இருக்குமோ...

சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,விடம் தென்மாவட்டங்களில் ஒரு தொகுதி கேட்டேன்; ஆனால், எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நான் வளர்ந்து விடக்கூடாது என்ற வகையிலும், நாங்கள் விரும்பாத எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர்.
- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன்


'ஏற்கனவே, 7 அடி உயரம் இருப்பீர்கள்... இன்னும் வளர்ந்தால் நன்றாக இருக்காது என, அ.தி.மு.க., நினைத்திருக்குமோ... அது சரி... அணி மாறத் தயாராயிட்டீங்களோ...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பேச்சு.



திண்டுக்கல் லியோனியை விட தரமானவர்கள், தி.மு.க.,வில் எங்கே இருக்கின்றனர்... அவரை விட மோசமானவர்கள் தான் அங்கு மந்திரியாகவே இருக்கின்றனர். ஒரு காலத்தில் அறிவார்ந்த தலைவர்கள் அங்கு இருந்தனர்; இப்போது இல்லை.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா


'லியோனியை விட மோசமானவர்களா... கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லையே... தமிழகத்தின் தலையெழுத்து இப்படியா ஆக வேண்டும்...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா பேட்டி.



எந்த பதவியும் இப்போது இல்லாவிட்டாலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க வருகின்றனர். போராட்டங்களில் கலந்து கொள்கிறேன். ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறேன். பதவி இருந்தால் தான் கட்சி பணியாற்ற வேண்டும் என்பதில்லையே!
- புதுச்சேரி முன்னாள் முதல்வர், காங்கிரசை சேர்ந்த நாராயணசாமி


latest tamil news




'ரிடையர்மென்ட் இல்லாத தொழில், அரசியல். ஐந்தாண்டுகளுக்கும், அவ்வப்போதும் யோகம் அடிக்கும். காத்திருப்பவர்கள் வெற்றி பெறுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர், காங்கிரசை சேர்ந்த நாராயணசாமி பேட்டி.



பா.ஜ.,வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, 'இனி பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் போட்டி' என்கிறார். அப்போ, அ.தி.மு.க., கதி அதோ கதியா?
- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


'எல்லா கட்சி விவகாரங்களையும் பேசுகிறீர்கள்... நம்ம கட்சி எப்போது தனித்து நின்று, ஆட்சியைப் பிடிக்கப் போகிறது... அதை முதலில் சொல்லுங்க காம்ரேட்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.



தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், இப்போதைய மத்திய இணையமைச்சருமான முருகனின் பெற்றோர், இன்னமும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வயலில் உழைத்து கொண்டு இருக்கின்றனர். அதை அவர்கள் பெருமையாகவும் கருதுகின்றனர்.
- பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ்


'இதுபோல, காங்., - தி.மு.க., கட்சிகளில் எந்த தலைவர் குடும்பமாவது இருக்குமா... பா.ஜ., இது தான், ' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
20-ஜூலை-202113:23:49 IST Report Abuse
Suppan "ஒரு காலத்தில் அறிவார்ந்த தலைவர்கள் திமுக வில் இருந்தனர்" பழ. கருப்பையா அவர்களே எப்பொழுதாவது பகல் கனவு கண்டீர்களா?
Rate this:
Cancel
gayathri - coimbatore,இந்தியா
20-ஜூலை-202110:22:10 IST Report Abuse
gayathri பல கட்சிமாறிகள் எதற்க்காக மாறுகிறார்கள். மக்கள் சேவை செய்யவா? மக்கள் சேவை செய்ய பதவி தேவை இல்லை. ஒவ்வொரு கட்சியாக தாவிய நபர் பேசுவது வேடிக்கை. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் மட்டுமே பேச தகுதியான நபர்கள். அப்படி இந்தியா அரசியவாதிகளில் எவருமேயில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X