அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் சிறுபான்மையின அரசியல்: ஹிந்துக்களிடம் எடுத்து கூற அண்ணாமலை உத்தரவு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (83)
Share
Advertisement
'துாத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சிறுபான்மையினர் வாயிலாக தி.மு.க., அரசியல் செய்கிறது. அதனால், அங்கிருக்கும் பெரும்பான்மை சமூகமான ஹிந்துக்கள், தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 'எனவே, ஹிந்துக்களை பா.ஜ., பக்கம் திரு ப்ப, அந்த பகுதிகளில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
தி.மு.க., சிறுபான்மையின அரசியல், ஹிந்துக்கள்,அண்ணாமலை, உத்தரவு, D.M.K, DMK, திமுக, திராவிட முன்னேற்றக் கழகம்

'துாத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சிறுபான்மையினர் வாயிலாக தி.மு.க., அரசியல் செய்கிறது. அதனால், அங்கிருக்கும் பெரும்பான்மை சமூகமான ஹிந்துக்கள், தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 'எனவே, ஹிந்துக்களை பா.ஜ., பக்கம் திரு ப்ப, அந்த பகுதிகளில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


முக்கியத்துவம்



இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மாநிலம் முழுதும், சிறுபான்மையின மக்களை பிரதானமாக வைத்தே அரசியல் செய்கின்றனர். இருந்தும், பெரும்பான்மை ஹிந்துக்கள், இதை புரிந்து கொள்ளாமல், அக்கூட்டணிக்கு ஓட்டு போடுவதால், அக்கூட்டணியினர் தேர்தலுக்கு தேர்தல் வெற்றி பெறுகின்றனர். குறிப்பாக, துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், முழுக்க முழுக்க சிறுபான்மை இனத்தவருக்கே முக்கியத்துவம் கொடுத்து, தி.மு.க., அரசியல் செய்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ், கிறிஸ்துவர்; துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சமூக நலத்துறை அமைச்சரான கீதா ஜீவன், கிறிஸ்துவர்; நெல்லை மாவட்டத்தில் இருந்து சபாநாயகரான ராதாபுரம் அப்பாவு, கிறிஸ்துவர். நெல்லை மாநகர் மாவட்ட செயலரும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் வகாப், முஸ்லிம்; நெல்லை எம்.பி., ஞானதிரவியம், கிறிஸ்துவர். அ.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்திருக்கும் முன்னாள் எம்.பி., விஜிலா சத்யானந்தை, உள்ளாட்சி தேர்தலில் மேயராக்குவதாக வாக்குறுதி அளித்து உள்ளனர்; அவரும் கிறிஸ்துவர். நெல்லையைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்; அவரும் கிறிஸ்துவர்.


latest tamil news






தீவிர பிரசாரம்



இப்படி கட்சியிலும், ஆட்சி பொறுப்பிலும் தொடர்ச்சியாக சிறுபான்மை இனத்தவருக்கே முக்கியத்துவம் கொடுத்து, தி.மு.க., அரசியல் செய்து வருகிறது. இதை ஹிந்துக்களிடம் எடுத்து சொன்னாலே பா.ஜ., தானாக வளரும் என, கட்சி நிர்வாகிகளிடம் கூறிய அண்ணாமலை, கட்சியை வளர்க்க, இது போன்ற விஷயங்களை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த மாவட்டங்களில், ஹிந்துக்களிடம் இந்த விஷயத்தை தீவிர பிரசாரமாக எடுத்துச் செல்ல, எங்கள் கட்சியினர் களம் இறங்கி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


'கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்'.



துாத்துக்குடி, நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில், தி.மு.க.,வை முழுக்க முழுக்க சிறுபான்மையின கட்சியாக மாற்றி விட்டனர். மற்ற மாவட்டங்களிலும் இது தொடர்கிறது. அவர்கள் அப்படி செய்து விட்டு போவதில், எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால், அரசையும் முழுமையாக சிறுபான்மையின மக்களுக்கானது என்பது போல மாற்றி, தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர். அவர்களின் செயல்பாடு நாட்டுக்கும், பெரும் பான்மையான ஹிந்துக்களுக்கும் எதிராக உள்ளது.

அதனால் தான், இதை பெரும்பான்மை ஹிந்துக்களிடம் எடுத்துச் சென்று, புரியவைக்க கூறியுள்ளோம். மத்திய உளவு அமைப்பும், இதை தீவிரமாக விசாரித்து, மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

-அண்ணாமலை,

தலைவர், தமிழக பா.ஜ.,

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
20-ஜூலை-202119:12:32 IST Report Abuse
வந்தியதேவன் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான்... “எந்த கோவிலுக்கு போனாலும் எல்லாச் சாமியும் ஒண்ணுதே... எந்த வீட்டுக்குப் போனாலும் எல்லாத் தாயும் ஒண்ணுதே”...ங்கற மாதிரி.. கடவுளில் நல்ல கடவுள், கெட்ட கடவுள் இல்லை... அதைப்போலவே... தாயில்... நல்ல தாய் என்பதும், கெட்ட தாய் என்பதும் கிடையாது...
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
20-ஜூலை-202118:36:17 IST Report Abuse
சீனி சிறுபான்மையினருக்கு பிரதிநிதுத்துவம் வேண்டும், அதற்க்காக இந்துக்களை வஞ்சிப்பதா ? கேவலம் காசுக்காக திமுகவிக்கு காவடி தூக்கும் இந்துக்கள் தான் இந்து மக்களின் எதிரிகள். அவர்களுக்கு என்ன, மணல் கொள்ளை, மலையையே குடைந்து கொள்ளையடிப்பார்கள், பொதுப்பணி, நீர்வளம் என அமைச்சர்கள் இருப்பது தாங்கள் வளமாக சம்பாதிக்க தான் இருக்கிறார்கள். கேவலம் ஓட்டுக்காக மிச்ச மீதி உள்ள இந்துக்களையும் மதமாற்றம் செய்துவிடும் அபாயம் உள்ளது.
Rate this:
Cancel
20-ஜூலை-202117:37:44 IST Report Abuse
Vasanth Kumar Vasanth Kumar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X