சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு துாண்டினார்: 'மாஜி' அமைச்சர் மீது புகார்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : 'முன்னாள் அமைச்சர் அன்பழகன் தலைமை செயலகம் முன் தீக்குளிக்கச் சொல்லி தற்கொலைக்கு துாண்டினார்' என ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தாலுகா மோலையானுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை
தற்கொலை, மாஜி அமைச்சர், அன்பழகன், பழனியப்பன்,  சட்டசபை, ஜெயலலிதா, புகார்,

சென்னை : 'முன்னாள் அமைச்சர் அன்பழகன் தலைமை செயலகம் முன் தீக்குளிக்கச் சொல்லி தற்கொலைக்கு துாண்டினார்' என ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தாலுகா மோலையானுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் செல்வாக்கில் என் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிக்கப்பட்டது. பழனியப்பன் குறித்து மறைந்த முதல்வர் ஜெ. வசித்த போயஸ் கார்டன் இல்லத்திற்கும் புகார் மனுக்கள் அனுப்பினேன். இதை அறிந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் என்னை அழைத்தார். நாம் இருவரும் இணைந்து பழனியப்பனுக்கு எதிராக கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு முதல்வரின் தனிச்செயலர் மற்றும் போயஸ் கார்டனுக்கு புகார் அளிக்கலாம் என்றார். அதன்படி புகார் அளித்தோம்.


latest tamil news


இது பழனியப்பனுக்கு தெரிந்து விட்டது .அன்பழகனின் மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த அன்பழகன், ' பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கோட்டையில் முதல்வர் செல்கையில் பழனியப்பன் மீது நடவடிக்கை கோரி நீ தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டும்' என வலியுறுத்தினார். அவ்வாறு செய்தால் பழனியப்பனின் பதவிகளை ஜெ., பறிப்பார். அதன் பின் மாவட்டச் செயலர், அமைச்சர் நான் தான். உன் மீதான வழக்குகளை வாபஸ் பெற வைக்கிறேன் என்று ஆசை காட்டினார்.அதன்படி ஜெ. முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன். பழனியப்பனின் பதவி பறிக்கப்பட்டது. பதவி வெறி காரணமாக என்னை தற்கொலைக்கு துாண்டிய அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்கு கிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
20-ஜூலை-202115:01:25 IST Report Abuse
INDIAN Kumar இந்த முன்னாள் அமைச்சர் மீது என்ன கோபமோ இந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருக்கு
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
20-ஜூலை-202114:58:17 IST Report Abuse
INDIAN Kumar அம்மாஜி காலத்தில் எப்படி பதவி கிடைக்கும் என்பதட்கு இது உதாரணம்
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
20-ஜூலை-202114:10:27 IST Report Abuse
ஆனந்த் உயிருடன் இருந்து கொண்டே தற்கொலைக்கு தூண்டினார் என வழக்கு தொடர்கிறது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X