பொது செய்தி

இந்தியா

உடைந்த அலைபேசியை தானாகவே ஒட்ட வைக்க முடியும்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோல்கட்டா :உடைந்த அலைபேசி தானாகவே தன்னை ஒட்டிக் கொள்ளும் புதிய பொருளை கோல்கட்டா மற்றும் கரக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் கரக்பூர் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் மின்னணு சாதனங்களுக்கான புதிய பொருளை கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து

கோல்கட்டா :உடைந்த அலைபேசி தானாகவே தன்னை ஒட்டிக் கொள்ளும் புதிய பொருளை கோல்கட்டா மற்றும் கரக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் கரக்பூர் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் மின்னணு சாதனங்களுக்கான புதிய பொருளை கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல அறிவியல் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:விண்வெளி ஆய்வு இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் உடைந்த பொருட்களை மீண்டும் ஒட்ட வைக்கக் கூடிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மற்றொரு ரசாயனம் வெப்பம் உள்ளிட்டவை தேவை.ஆனால் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பொருள் அதைவிட 10 மடங்கு சிறந்தது. மேலும் இதற்கு மற்றொரு பொருளின் உதவி தேவையில்லை. தானாகவே செயல்பட்டு உடைந்தப் பொருளை சரி செய்து விடும். அலைபேசி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இந்தப் பொருளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X