உறவை வலுப்படுத்துவோம்: நேபாள பிரதமர் துபா உறுதி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
காத்மாண்டு:இந்தியா - நேபாளம் இடையிலான உறவை வலுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக நேபாளத்தின் புதிய பிரதமர் ஷேர் பகதுார் துபா தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியில் இருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் ஏற்பட்டது.கடந்தாண்டு டிசம்பரில்
 உறவை வலுப்படுத்துவோம்: நேபாள பிரதமர் துபா உறுதி

காத்மாண்டு:இந்தியா - நேபாளம் இடையிலான உறவை வலுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக நேபாளத்தின் புதிய பிரதமர் ஷேர் பகதுார் துபா தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியில் இருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் ஏற்பட்டது.கடந்தாண்டு டிசம்பரில் பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையை பிரதமர் சர்மா ஒலி கலைத்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன்படி ஒலி தலைமையில் மீண்டும் அரசு அமைந்தது.கடந்த மே மாதத்தில் பார்லி.,யை கலைக்க ஒலி மீண்டும் பரிந்துரை செய்தார். அதையேற்று பார்லி., யை கலைத்து அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். நவ., 12, 19ல் தேர்தலை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.எதிர்க்கட்சியான நேபாள காங்., வழக்கு தொடர்ந்தது. அதில் பார்லி., மீண்டும் செயல்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நேபாள காங்., தலைவர் ஷேர் பகதுார் துபாவை பிரதமராக்கும்படியும் உத்தரவிடப்பட்டது.இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஷேர் பகதுார் துபா பிரதமராக சமீபத்தில் பதவியேற்றார்.

30 நாட்களுக்குள் தன் பெரும்பான்மையை துபா நிரூபிக்க வேண்டும். இதன் அடிப்படையில் நேற்று முன் தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் துபா வெற்றி பெற்றார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து நேபாள பிரதமர் துபா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்திக்கு நன்றி. இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த, மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X