பொது செய்தி

தமிழ்நாடு

கிடைமாடுகளின் மேய்ச்சல் நிலங்களை அபகரிக்கும் அரசு அலுவலகங்கள்: பல்லுயிர் பெருக்கம், மண் வளம் அழியும் அபாயம்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை: கிடைமாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் அரசு அலுவலகங்களாக கட்டடங்களாக மாறி வருவதால் பல்லுயிர் பெருக்கம் அழிவதுடன் மண்வளம் குறைவதற்கும் வழிவகுக்கிறது.பாரம்பரிய மேய்ச்சல் முறையில் மாடுகள், ஆடுகள் ஓரிடத்தில் கட்டி போட்டு வளர்ப்பதில்லை. அவற்றுக்கு தனியாக தீவனம் அளிப்பதில்லை. தினமும் 10 கிலோமீட்டர் துாரம் வரை நடந்து சென்று மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து
கிடைமாடுகள், மேய்ச்சல் நிலங்கள், அரசு அலுவலகங்கள், பல்லுயிர் பெருக்கம், மண் வளம், அழியும் அபாயம்

மதுரை: கிடைமாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் அரசு அலுவலகங்களாக கட்டடங்களாக மாறி வருவதால் பல்லுயிர் பெருக்கம் அழிவதுடன் மண்வளம் குறைவதற்கும் வழிவகுக்கிறது.

பாரம்பரிய மேய்ச்சல் முறையில் மாடுகள், ஆடுகள் ஓரிடத்தில் கட்டி போட்டு வளர்ப்பதில்லை. அவற்றுக்கு தனியாக தீவனம் அளிப்பதில்லை. தினமும் 10 கிலோமீட்டர் துாரம் வரை நடந்து சென்று மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து உரிமையாளருடன் வீடு திரும்பும் வகையில் பழக்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளாக தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களாக இருந்த அரசு புறம்போக்கு நிலங்கள் அரசு கட்டடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே இடையபட்டியில் இருந்த 2000 ஏக்கர் மேய்ச்சல் நிலம் இந்தோ திபெத்திய படை, பெண்கள் காவலர் பயிற்சி பள்ளி, சிப்காட், தீயணைப்பு துறைக்கு முழுவதுமாக தாரை வார்க்கப்பட்டு விட்டது.இதனால் இப்பகுதியில் கிடைமாட்டு தொழிலில் ஈடுபட்டிருந்த 500 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கிடைமாடுகளுக்கான மேய்ச்சல் நிலம் கிடைக்காததால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன் பல்லுயிர் பெருக்கம் குறைந்து வருவதாக தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆய்வாளர் கபிலன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:உயர்ரக பால் மாடுகளின் சாணம், கோமியம் விவசாயத்திற்கு உதவாது. மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் சாணம், கோமியம் மிகச்சிறந்த உரமாக இயற்கை விவசாயத்திற்கு பயன்படுகிறது. மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூலித்தொழிலுக்கு மாறுகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் உள்ள 1200 விவசாயிகளை ஒருங்கிணைத்து தொழுவம் என்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை நபார்டு வங்கி உதவியுடன் உருவாக்கினோம். இயற்கை சாணம், கோமியத்தை எதிர்பார்க்கும் இயற்கை விவசாயிகளோடு கிடைமாடு வளர்ப்பவர்களை ஒருங்கிணைக்கிறோம். ஒரு மாடுக்கு ரூ.3 வீதம் ஒரு ஏக்கரில் 1000 மாடுகள் கிடை அமைப்பதன் மூலம் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கிறது. விவசாய நிலத்தில் மண்வளம் பெருகி மண்புழுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. சாணம், கோமியத்தால் மண் உயிர்ப்புத்தன்மை பெற்று மண் சார்ந்த புழு, பூச்சி போன்ற பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகிறது.


latest tamil news



இதேமுறையில் கிடைஆடுகளின் சாணமும் உரமாகிறது. இயற்கை உரத்தை விவசாயிகள் விரும்பினாலும் செலவு என்பதால் தயங்குகின்றனர்.உரங்களுக்கு அரசு மானியம் வழங்குவது போல கிடைமாடு, கிடைஆடுகள் அமைப்பதற்கு அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்கினால் அதை வளர்ப்பவர்கள் வேறு தொழிலுக்கு செல்ல மாட்டார்கள். இயற்கை விவசாய உற்பத்தி அதிகமாகும். மேலும் மேய்ச்சல் நிலங்களை அரசு கட்டடமாக மாற்றுவதை தடை செய்ய வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
20-ஜூலை-202115:35:50 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy அரசு கட்டிடங்கள் கண்டிப்பாக பொது மக்களிடம் விலைக்கு வாங்கி கட்ட வேண்டும் என்று எந்த ஆணையும் சட்டத்தால் போடா முடியாதா? அணைத்து பொது இடங்களும் இல்லாமல் போய்விட்டால் பல ஆண்டு கழித்து நிலைமையையும் யார் கவனத்தில் கொள்வது ?
Rate this:
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
20-ஜூலை-202111:50:23 IST Report Abuse
I love Bharatham இயற்கை விட்டு வெளியே போனதால் ...நாம் அடையும் துன்பம் சொல்லல் அடங்காது ..இனியாவது மாடுகளுக்கு உரிய இடத்தி கொடுத்து ..இயற்கை அன்னையை போற்றுவோம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஜூலை-202111:03:49 IST Report Abuse
Ramesh Sargam நிலங்கள் அபகரிப்பு, மணல் கொள்ளை, சாராயம் காய்ச்சுதல், கொலை, கொள்ளை, கட்பழிப்பு, மீட்டர் வட்டி, ரௌடிகள் ராஜ்ஜியம், கட்ட பஞ்சாயத்து இப்படி பல விஷயங்களில் திமுக வை யாராலும் மிஞ்சமுடியாது,
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
20-ஜூலை-202114:53:43 IST Report Abuse
சீனிஉங்களை விட தெளிவா திமுகவின் தொழில்வளர்ச்சியை பட்டியலிட முடியாது..... ஆனா அரசியல் வாரிசுஉரிமையை மட்டும் விட்டுடிங்க.....
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஜூலை-202119:22:10 IST Report Abuse
Ramesh Sargamஅரசியல் வாரிசு உரிமையை விட்டதற்கு மன்னிக்கவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X