பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியை கண்டித்து புன்செய்புளியம்பட்டியில் கடையடைப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைப்பதாக எச்சரித்த, நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, புளியம்பட்டியில் நேற்று கடையடைப்பு நடந்தது. புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான, 136 கடைகள், பஸ் ஸ்டாண்ட் வளாகம், வாரச்சந்தை, கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இவற்றில் சில கடைக்காரர்கள், நான்கு மாதம் முதல் ஓராண்டு வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

புன்செய்புளியம்பட்டி: வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைப்பதாக எச்சரித்த, நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, புளியம்பட்டியில் நேற்று கடையடைப்பு நடந்தது. புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான, 136 கடைகள், பஸ் ஸ்டாண்ட் வளாகம், வாரச்சந்தை, கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இவற்றில் சில கடைக்காரர்கள், நான்கு மாதம் முதல் ஓராண்டு வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர். நோட்டீஸ் அனுப்பியும் கட்டாததால், வாடகை செலுத்தாத கடைகளை, பூட்டி சீல் வைப்பதாக, அதிகாரிகள் எச்சரித்தனர். இதை கண்டித்து, பஸ் ஸ்டாண்ட் வளாகம், கோவை சாலையில் உள்ள, 70 கடைகளை அடைத்து வியாபாரிகள், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை, 10:00 மணியளவில், நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'கொரோனாவால் இரண்டு மாதமாக கடை திறக்க முடியவில்லை. டிபாசிட் தொகையில் கழித்துக்கொள்ளுங்கள்; இல்லையேல் தள்ளுபடி செய்யுங்கள்' என்று, கடைக்காரர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளோ, 'டிபாசிட் தொகைக்கும், பாக்கி வைத்துள்ள வாடகைக்கும் சம்பந்தம் இல்லை. வாடகை தள்ளுபடி குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என்று கூறவே, 11:30 மணிக்கு மேல், கடைகளை திறந்தனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X