பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுத்தால் அபராதம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஈரோடு: டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாகும் வீடுகளுக்கு, அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஈரோடு மாநகராட்சியில், நான்கு மாண்டலங்களிலும், டெங்கு கொசு ஒழிப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சாக்கடை தூர்வாரும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. அதேசமயம் சுகாதார பணியாளர்கள், வீடுகளில் டெங்கு

ஈரோடு: டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாகும் வீடுகளுக்கு, அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஈரோடு மாநகராட்சியில், நான்கு மாண்டலங்களிலும், டெங்கு கொசு ஒழிப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சாக்கடை தூர்வாரும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. அதேசமயம் சுகாதார பணியாளர்கள், வீடுகளில் டெங்கு கொசு உள்ளதா? என ஆய்வு நடத்தி வருகின்றனர். வீடுகளில் தண்ணீர் தேங்காமல், சுத்தமாக வைத்திருக்க, அறிவுரை வழங்கி வருகின்றனர். இனி அடுத்த கட்டமாக, டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X