பொது செய்தி

தமிழ்நாடு

98 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். 98 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கு, 11,278 மாணவர், 12,612 மாணவியர் என, 23,890 பேர் தயாராகினர். கொரோனாவால் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 96.99 சதவீத தேர்ச்சியே கிடைத்தது. 98 அரசு பள்ளிகள், 6 நகராட்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். 98 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கு, 11,278 மாணவர், 12,612 மாணவியர் என, 23,890 பேர் தயாராகினர். கொரோனாவால் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 96.99 சதவீத தேர்ச்சியே கிடைத்தது. 98 அரசு பள்ளிகள், 6 நகராட்சி பள்ளி, 12 நிதியுதவி பெறும் பள்ளிகள், 2 நலப்பள்ளிகள், 82 மெட்ரிக் பள்ளிகள்,17 சுய நிதி பள்ளி என மொத்தம் 217 பள்ளிகளில் படித்த அனைவரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

'கால்நடை மருத்துவம் படிப்பதற்கு ஆசை': பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரகுபிரகாஷ், 600க்கு, 567 மதிப்பெண் எடுத்து, பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். விவசாய பாடப்பிரிவை விருப்ப பாடமாக படித்தார். இவரின் தந்தை குணசேகரன் விவசாயி ஆவார். மதிப்பெண் குறித்து மாணவன் கூறியதாவது: கொரோனாவால் பொதுத்தேர்வு நடக்கவில்லை. ஆனாலும், பொதுத்தேர்வு நடந்திருந்தால், இன்னும் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன். கால்நடை மருத்துவம் படிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

'சாப்ட்வேர் இன்ஜினியராக விரும்பும் பிரவீண்ராஜ்': கோபி, வைரவிழா மேல்நிலைப்பள்ளி மாணவன் பிரவீண்ராஜ், பிளஸ் 2 தேர்வில், 559.59 மதிப்பெண் எடுத்துள்ளார். மதிப்பெண் விபரம்: தமிழ், 97.11, ஆங்கிலம், 93.56, இயற்பியல், 88.57, வேதியியல், 93.71, கணினி அறிவியில், 96.86, கணிதம், 89.78. இதுகுறித்து மாணவன் கூறியதாவது: பத்தாம் வகுப்பில், 469 மதிப்பெண், பிளஸ் 1ல், 487 எடுத்தேன். இதனால், பிளஸ் 2வில், 559 மதிப்பெண் கிடைத்துள்ளது. எம்.டெக்., முடித்து, சாப்ட்வேர் இன்ஜினியராக ஆசை. தந்தை வெங்கடாசலம் டீக்கடை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X