பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்; மாணவியர் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்; மாணவியர் மகிழ்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
ஈரோடு: பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதற்கு, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட, மாணவ, மாணவியரின் கருத்து:வி.ஜீவஜோதி, ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி: நான் பயாலஜி, கணிதம் குரூப் எடுத்து படித்தேன். ஆன்லைன், ரெகுலர் வகுப்பிலும் படித்தேன், ஆன்லைனில் வார, மாதம் ஒரு டெஸ்ட் நடந்தது. பள்ளியில் மூன்று முறை யூனிட் டெஸ்ட் நடந்தது.

ஈரோடு: பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதற்கு, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட, மாணவ, மாணவியரின் கருத்து:


வி.ஜீவஜோதி, ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி: நான் பயாலஜி, கணிதம் குரூப் எடுத்து படித்தேன். ஆன்லைன், ரெகுலர் வகுப்பிலும் படித்தேன், ஆன்லைனில் வார, மாதம் ஒரு டெஸ்ட் நடந்தது. பள்ளியில் மூன்று முறை யூனிட் டெஸ்ட் நடந்தது. தேர்வு நடந்திருந்தாலும் அதிக மதிப்பெண் பெற்று இருப்பேன். தற்போது அதிக மதிப்பெண் பெற்று இருப்பது மகிழ்ச்சியே. நீட் தேர்வு எழுத உள்ளேன்.


ஜெ.ஹர்ஷினி, ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி: பயாலஜி, கணிதம் குரூப் எடுத்து படித்தேன், எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் கிடைத்தது, மகிழ்ச்சியாக உள்ளது. ஆன்லைன் டெஸ்ட், யூனிட் டெஸ்ட் எழுதி தேர்வுக்கு தயாராக இருந்தேன். தேர்வு இருந்தாலும் இதேபோல் அதிக மதிப்பெண் பெற்றிருப்பேன்.


எம்.ஸ்ருதி-ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி மாணவி: ஆன்லைன் வகுப்பு, வகுப்பாசிரியர் வழிகாட்டுதல், ரெகுலராக வகுப்பில் படித்தேன். மதிப்பெண் அளிக்கப்பட்ட முறை நன்றாக இருந்தது. பேஷன் டிசைன் படிக்க உள்ளேன். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1ல் அதிக மதிப்பெண் எடுத்து இருந்தேன். அது தற்போது அதிக மதிப்பெண் பெற உதவியது.

பி.மிராக்ளின் ஜெபஸ்டினா- கொங்கு கல்வி நிலையம்: பயாலஜி குரூப் படித்தேன். எதிர்பார்த்த மதிப்பெண் தான் வந்துள்ளது. நேரடி தேர்வு எழுதி இருந்தால் இதே மதிப்பெண் தான் வந்து இருக்கும். பள்ளியில் மூன்று மாதம் டெஸ்ட் வைத்தனர்.


வி.எம்.அக்?ஷயா, கொங்கு கல்வி நிலையம்: வணிகவியல் குரூப் படித்தேன், பி.காம் படித்த பின் சி.ஏ. படிக்க எண்ணி உள்ளேன். தற்போது வழங்கப்பட்ட மதிப்பெண் மகிழ்ச்சியாக உள்ளது. தேர்வு எழுதி இருந்தால் கூட இதே மதிப்பெண் தான் பெற்று இருப்பேன். எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தான் தற்போது மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X