நம்பிக்கையில்லா தீர்மானம்: கூட்டுறவு விற்பனை சங்க தலைவருக்கு அவகாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நம்பிக்கையில்லா தீர்மானம்: கூட்டுறவு விற்பனை சங்க தலைவருக்கு அவகாசம்

Added : ஜூலை 20, 2021
Share
கோபி: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விளக்கம் தர, கூட்டுறவு சங்க தலைவர் தலைவருக்கு, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கோபி, மொடச்சூர் சாலையில், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த காளியப்பன், துணைத்தலைவராக மணி, நிர்வாக குழு உறுப்பினர் ஒன்பது பேர் உள்ளனர். தலைவர் காளியப்பன் சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்தார்.

கோபி: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விளக்கம் தர, கூட்டுறவு சங்க தலைவர் தலைவருக்கு, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கோபி, மொடச்சூர் சாலையில், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த காளியப்பன், துணைத்தலைவராக மணி, நிர்வாக குழு உறுப்பினர் ஒன்பது பேர் உள்ளனர். தலைவர் காளியப்பன் சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்தார். இதனால் அவரை பதவியில் இருந்து நீக்க, மற்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். உரிய விளக்கம் கேட்டு, காளியப்பனுக்கு துணைப்பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள், நேரில் அல்லது தபாலில், உரிய விளக்கம் தெரிவிக்கவும். இல்லையேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார். 'கடிதத்துக்கு விளக்கம் தராவிட்டால், கெடு முடிந்தவுடன், சிறப்பு கூட்டம் நடத்தப்படும். அதில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள், தலைவரை நீக்க வலியுறுத்தி கையெழுத்திட்டால், அவரை பதவி நீக்க துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X