மலைப்பாதையில் ஆம்புலன்சில் பிரசவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பாதையில் ஆம்புலன்சில் பிரசவம்

Added : ஜூலை 20, 2021
Share
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலை, கோட்டமாளம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மனைவி லட்சுமி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின்படி சென்ற, 108 அவசரகால ஆம்புலன்ஸ், அவரை ஏற்றிக்கொண்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கிளம்பியது. திம்பம் மலைப்பாதையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்றது. இந்நிலையில், ??வது கொண்டை ஊசி வளைவில்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலை, கோட்டமாளம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மனைவி லட்சுமி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின்படி சென்ற, 108 அவசரகால ஆம்புலன்ஸ், அவரை ஏற்றிக்கொண்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கிளம்பியது. திம்பம் மலைப்பாதையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்றது. இந்நிலையில், ??வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, வலி தாங்க முடியாமல் லட்சுமி துடிக்கவே, மருத்துவ உதவியாளர் அஜித்குமார் பிரசவம் பார்த்தார். ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய், சேய் சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கருக்கு, மலை கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X