பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.ஹெச்., நர்ஸ் மீது குற்றச்சாட்டு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, விஜயமங்கலத்தை சேர்ந்தவர் தீபிகா, 24; நேற்று வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையில், சிறிது நேரத்துக்குப்பின், அனுமதி சீட்டு வாங்கி வரும்படி, தீபிகாவிடம் நர்ஸ்கள் தெரிவித்தனர். மிகவும் தளர்ச்சியாக இருந்ததால், மெதுவாக சென்று, அனுமதி சீட்டு வாங்கி வந்தவரை,

ஈரோடு: ஈரோடு, விஜயமங்கலத்தை சேர்ந்தவர் தீபிகா, 24; நேற்று வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையில், சிறிது நேரத்துக்குப்பின், அனுமதி சீட்டு வாங்கி வரும்படி, தீபிகாவிடம் நர்ஸ்கள் தெரிவித்தனர். மிகவும் தளர்ச்சியாக இருந்ததால், மெதுவாக சென்று, அனுமதி சீட்டு வாங்கி வந்தவரை, ஒரு நர்ஸ், 'என்ன இவ்வளவு நேரமா. நீ வெளியே போம்மா,' என மிரட்டினாராம். நடக்க முடியவில்லை என்றும், அனுமதி சீட்டு வாங்க தாமதமானதாகவும் தெரிவித்தபோது, 'என்னை முறைக்கிறாயா, ஓங்கி அடித்துவிடுவேன்' நர்ஸ் மிரட்டி, சிகிச்சை வழங்க முடியாது எனக்கூறி அனுப்பி விட்டாராம். இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்த தீபிகா, அவரது குடும்பத்தினர், மனு வழங்கி கூறியதாவது: நர்ஸின் செயல் குறித்து, அங்குள்ள டாக்டர், பிற நர்ஸ்களிடம் கூறியும், அவருக்கு ஆதரவு தெரிவித்து, எனக்கு சிகிச்சை வழங்காமல் அனுப்பினர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X