பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் தி.மு.க., பிரமுகர் மீது ஈரோட்டில் நில அபகரிப்பு புகார்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஈரோடு: சேலத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் மீது, ஈரோடு எஸ்.பி.,யிடம், நில அபகரிப்பு புகார் தரப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம், பாரதி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 42; ஈரோடு எஸ்.பி., சசிமோகனிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சத்தியமங்கலத்தில் ஜவுளி கடை நடத்துகிறேன். ஆசனூரில், 0.75 சென்ட் நிலத்தை, 2018ல் வாங்கினேன். இந்த இடத்தின் அருகே, சேலம்

ஈரோடு: சேலத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் மீது, ஈரோடு எஸ்.பி.,யிடம், நில அபகரிப்பு புகார் தரப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம், பாரதி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 42; ஈரோடு எஸ்.பி., சசிமோகனிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சத்தியமங்கலத்தில் ஜவுளி கடை நடத்துகிறேன். ஆசனூரில், 0.75 சென்ட் நிலத்தை, 2018ல் வாங்கினேன். இந்த இடத்தின் அருகே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் தாரை மணியனுக்கு சொந்தமான, 2.10 ஏக்கர் காலியிடம் உள்ளது. இந்நிலையில் அவர், எனது இடத்துக்கு செல்லும் வழித்தடத்தை அடைத்து, நான் செல்ல முடியாத வகையில் தொந்தரவு அளித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், எனது இடத்துக்கு சென்றேன். அங்கு இரும்பு கேட் போடப்பட்டு, ?0 பேர் இருந்தனர். இதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தை பேசி, ஆயுதங்களால் தாக்கினர். அபகரிப்பு செய்தவரிடம் இருந்து நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X