பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளை அகற்ற கோரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம்: தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தலைவர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: சேலம் மாவட்டத்தில், 11 உழவர் சந்தைகள் உள்ளன. அதன் நுழைவாயில் முன், அதிகளவில் காய்கறி, பழக்கடைகள் செயல்படுவதால், உழவர்சந்தை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அதனால், விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் விற்பனையாகாமல் திருப்பி

சேலம்: தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தலைவர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: சேலம் மாவட்டத்தில், 11 உழவர் சந்தைகள் உள்ளன. அதன் நுழைவாயில் முன், அதிகளவில் காய்கறி, பழக்கடைகள் செயல்படுவதால், உழவர்சந்தை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அதனால், விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் விற்பனையாகாமல் திருப்பி எடுத்துச்செல்லும் நிலை உள்ளது. அரசு உத்தரவுப்படி உழவர்சந்தையை சுற்றி, 100 மீட்டர் தாண்டி தான், காய்கறி கடைகள் இடம்பெற வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, விதிமீறிய கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X